ஊடகப் புறக்கணிப்பால் அமெரிக்காவில் அதிர்ச்சி; மைக் இல்லாமல் பேசிய டொனால்ட் டிரம்ப்
செய்தி முன்னோட்டம்
CNN, MS NOW மற்றும் Politico ஆகியவற்றுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முதன்மை தொலைக்காட்சி அமைப்புகள் டிரம்பின் நிகழ்வுகளை புறக்கணித்துள்ளன. இதன் காரணமாக, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அதிபரின் உரை கேட்காமல் போனது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகை செய்திகளை சுழற்சி முறையில் சேகரிக்கும் அமைப்பில் உள்ள ABC, சிபிஎஸ், சிஎன்என், Fox News மற்றும் NBC ஆகிய ஐந்து தொலைக்காட்சிகளும் திங்கள்கிழமை நடைபெற்ற டொனால்ட் டிரம்பின் நிகழ்வை புறக்கணித்தன. "அரசாங்கம் குறித்த துல்லியமான, சுதந்திரமான தகவல்களைப் பெறப் பொதுமக்களுக்கு உரிமை உண்டு. தங்களுக்குப் பிடிக்காத செய்திகளை வெளியிடுவதற்காக எந்தவொரு ஊடகத்தையும் நிர்வாகம் தடை செய்யக் கூடாது" என இந்த ஐந்து ஊடகங்களும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
டிரம்ப் டிவி
பின்னடைவை சந்தித்த 'டிரம்ப் டிவி' மற்றும் நேரலை
ஊடகங்களின் புறக்கணிப்பால், வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் அமைக்கப்பட்ட புதிய ஹெலிபேட் திறப்பு விழாவில் அதிபர் டிரம்ப் பேசியது எவருக்கும் சரியாகக் கேட்கவில்லை. நேரலைக்கான அதிகாரப்பூர்வ ஒலிவாங்கிகள் (Mic) மற்றும் கேமராக்கள் இல்லாததால், 'ஹெலிகாப்டர்' சத்தத்தில் அதிபர் டிரம்பின் பேச்சு முழுமையாக மூழ்கியது.
இதனை வலதுசாரி ஊடகமான நியூஸ்மேக்ஸ் தொகுப்பாளரும் சுட்டிக்காட்டி, வெள்ளை மாளிகையின் இந்த ஊடகத் தடை அவர்களுக்கே சிறு பின்னடைவாக அமைந்திருப்பதாகத் தெரிவித்தார்.
இச்சம்பவத்திற்கு பிறகே வெள்ளை மாளிகை தனது சொந்த ஒளிபரப்புத் தளமான 'டிரம்ப் டிவி'யை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
விளக்கம்
சட்ட உதவியை நாடியுள்ள ஊடகங்கள்
முன்னதாக, நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானியுடன் நடைபெற்ற கூட்டுக் செய்தி சந்திப்பின் போது, அனைத்து ஊடகங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் என மேயர் பகிரங்கமாக அறிவித்தார்.
அப்போது, ஈரான் போர் மற்றும் எரிபொருள் விலை உயர்வைத் திசைதிருப்பவே ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், "எனது நிர்வாகத்தைப் பற்றி எப்போதும் எதிர்மறையான செய்திகளையே வெளியிடுகிறார்கள். ஊடகங்கள் நேர்மறையான செய்திகளையும் வெளியிட வேண்டிய கடமை உள்ளது" எனக் கூறித் தனது நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.
இதனிடையே, வெள்ளை மாளிகையின் இந்தத் தடைக்கு எதிராகத் தடைசெய்யப்பட்ட மூன்று ஊடகங்களும் நீதிமன்றத்தை நாடியுள்ளன.