Loading...
அமெரிக்காவில் AI இனி 'சூப்பர் இண்டலிஜன்ஸ்' (SI) என்று அழைக்கப்படுமாம்: டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு
அமெரிக்காவில் AI இனி சூப்பர் இண்டலிஜன்ஸ்(SI) என்று அழைக்கப்படுமாம்

அமெரிக்காவில் AI இனி 'சூப்பர் இண்டலிஜன்ஸ்' (SI) என்று அழைக்கப்படுமாம்: டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 30, 2026
08:14 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அரசு அமைப்புகள் மற்றும் கூட்டாட்சித் துறைகளின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டில் 'செயற்கை நுண்ணறிவு' (AI) என்ற சொல்லுக்கு பதிலாக 'சூப்பர் இண்டலிஜன்ஸ்' (SI) என்ற சொல்லை பயன்படுத்த உத்தரவிடும் நிர்வாக ஆணை ஒன்றில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். நவீன ஏஐ அமைப்புகளின் வளர்ச்சி மனித அறிவாற்றலை கடந்து மிக அதிவேகமாக உருவெடுத்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 'செயற்கை' என்ற வார்த்தை இத்தொழில்நுட்பத்தின் முழுமையான திறனை குறைத்துக் காட்டுவது போல் இருப்பதால், 'சூப்பர் இண்டலிஜன்ஸ்' (Super Intelligence) என்ற பெயர் மிகவும் பொருத்தமாகவும் துல்லியமாகவும் இருக்கும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய அம்சங்கள்

உத்தரவின் முக்கிய அம்சங்கள் மற்றும் வரையறைகள்

இப்புதிய நிர்வாக உத்தரவு பின்வரும் முக்கிய நடைமுறைகளை வலியுறுத்துகிறது, கூட்டாட்சித் துறைகளின் அதிகாரப்பூர்வ கடித போக்குவரத்துகள், கொள்கை ஆவணங்கள், அறிக்கைகள் மற்றும் இணையதளங்களில் இனி AI என்பதற்குப் பதிலாக SI பயன்படுத்தப்படும்.

பழைய ஆவணங்களை மாற்ற வேண்டியதில்லை.

அடுத்த 60 நாட்களுக்குள் 'சூப்பர் இண்டலிஜன்ஸ்' என்பதற்கான புதிய கூட்டாட்சிச் சட்ட வரையறையை தயாரித்து சமர்ப்பிக்க அதிபரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய ட்ரம்ப், AI தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்த சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

ஐரோப்பிய நாடுகள் விடுத்த கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கான கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா, தொழில்முறை கண்டுபிடிப்புகளுக்கான சுதந்திரத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT