Loading...
அமெரிக்கா - சீனா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பில் எட்டப்பட்ட முக்கிய முடிவு
அமெரிக்கா - சீனா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்

அமெரிக்கா - சீனா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பில் எட்டப்பட்ட முக்கிய முடிவு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 25, 2026
11:48 am

செய்தி முன்னோட்டம்

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பை தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் சீனா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த பரஸ்பர சுங்க வரி உயர்வு, ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் தொழில்நுட்பச் சந்தை சார்ந்த மோதல்களுக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்புதிய கூட்டு ஏற்பாடு இரு நாட்டு மக்களுக்கும் வணிகத் துறைக்கும் மட்டுமன்றி, ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்திற்கும் ஒரு நற்செய்தி எனச் சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விவகாரங்கள்

செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேச விவகாரங்கள்

ஒப்பந்தத்தின் முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக வர்த்தகப் போர்நிறுத்தம் வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் நிலுவையில் உள்ள பிற பொருளாதார பிரச்சினைகளை பேசித் தீர்க்க இரு தரப்பிற்கும் கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.

இச்சந்திப்பில் வர்த்தகம் மட்டுமன்றி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் நன்மைகள், அபாயங்கள் மற்றும் அதன் தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் தைவான் சுதந்திரத்திற்கு அமெரிக்கா எதிர்ப்ப தெரிவிக்க வேண்டும் எனச் சீனா வலியுறுத்தியதுடன், உக்ரைன் போர், மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் கொரிய தீபகற்பத்தின் நிலைமைகள் குறித்தும் தலைவர்கள் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

ADVERTISEMENT