Loading...
இந்தியாவில் Apple Pay அறிமுகம்; இனி OTP, PIN இல்லாமல் கட்டணம் செலுத்தலாம்
Apple Pay சேவை இந்தியாவில் செப்டம்பர் 30 முதல் அதிகாரப்பூர்வமாகத் அறிமுகம்

இந்தியாவில் Apple Pay அறிமுகம்; இனி OTP, PIN இல்லாமல் கட்டணம் செலுத்தலாம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 30, 2026
11:14 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனம் தனது 'Apple Pay' சேவை சேவையை இந்தியாவில் செப்டம்பர் 30 முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் பயனர்கள் இனி மிக எளிதாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். தற்போது முதற்கட்டமாக, ஆக்சிஸ் வங்கி வழங்கும் விசா மற்றும் மாஸ்டர்கார்டு கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஆப்பிள் பே சேவையை பயன்படுத்த முடியும். விரைவில் பிற வங்கிகளுக்கும் இச்சேவை விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

ஆப்பிள் பே-வின் சிறப்பம்சங்கள்

வழக்கமான கார்டு பரிவர்த்தனைகள் மற்றும் நெட் பேங்கிங் போல் அல்லாமல், ஆப்பிள் பே மூலம் கட்டணம் செலுத்த OTP அல்லது PIN எண்களை உள்ளிட வேண்டிய அவசியமில்லை.

பயோமெட்ரிக் அங்கீகாரங்களான ஃபேஸ் ஐடி அல்லது டச் ஐடி மூலம் பரிவர்த்தனைகள் உடனடியாவும் பாதுகாப்பாகவும் உறுதிசெய்யப்படுகின்றன.

ஆப்பிள் பே மூலம் செலுத்தப்படும் தொகைகளுக்கும் கிரெடிட் கார்டுகளுக்கான வழக்கமான ரிவார்டு புள்ளிகள் மற்றும் சலுகைகள் தொடர்ந்து கிடைக்கும்.

செயல்முறை

ஆப்பிள் பே-வை செட்-அப் செய்வது எப்படி?

1. உங்கள் ஐபோனில் உள்ள 'Wallet' செயலியைத் திறக்கவும்.

2. மேலே உள்ள '+' குறியீட்டைக் கிளிக் செய்யவும்.

3. உங்கள் தகுதியான ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளிட்டுச் சேர்க்கவும். (அல்லது Mobile Banking ஆப் மூலமாகவும் சேர்க்கலாம்).

ADVERTISEMENT

பயன்பாடு

கட்டணம் செலுத்தும் முறை

கடைகளில் உள்ள காண்டாக்ட்லெஸ் (NFC) கார்டு இயந்திரங்களுக்கு அருகே ஐபோன் அல்லது ஆப்பிள் வாட்சை வைத்து, சைடு பட்டனை இருமுறை அழுத்தி Face ID/Touch ID மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம்.

Zomato, Blinkit, Croma, Reliance Brands, Tata 1mg, Ixigo உள்ளிட்ட முன்னணி செயலிகள் மற்றும் இணையதளங்களில் 'Apple Pay' தேர்வைப் பயன்படுத்தி நேரடி பரிவர்த்தனை செய்யலாம்.

iOS 18 அல்லது அதற்குப் பிந்தைய இயங்குதளத்தில் இயங்கும் iPhone XR மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்கள் மற்றும் watchOS 11-இல் இயங்கும் Apple Watch Series 6 மற்றும் அதற்கு பிந்தைய மாடல்களில் இச்சேவையைப் பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT