Loading...
ஏஐ தொழில்நுட்பத்தைக் கண்காணிக்க புதிய படை! டிரம்ப் அமைத்த சூப்பர் இன்டலிஜென்ஸ் ஃபோர்ஸ்
ஏஐ தொழில்நுட்பத்தைக் கண்காணிக்க புதிய படை அமைத்தார் டொனால்ட் டிரம்ப்

ஏஐ தொழில்நுட்பத்தைக் கண்காணிக்க புதிய படை! டிரம்ப் அமைத்த சூப்பர் இன்டலிஜென்ஸ் ஃபோர்ஸ்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 04, 2026
09:16 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, அதனால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் வாய்ப்புகளை ஆராய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளார். சூப்பர் இன்டலிஜென்ஸ் ஃபோர்ஸ் (Super Intelligence Force) எனப் பெயரிடப்பட்டுள்ள இக்குழுவிற்கு அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் ஜே கிளேட்டன் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை அமெரிக்க கூட்டாட்சி அரசு எவ்வாறு கண்காணிக்க வேண்டும் என்பது குறித்து 120 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க இக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தம்

தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களுடன் வெள்ளை மாளிகை ஒப்பந்தம்

கூகுள், மெட்டா, ஓபன்ஏஐ, ஆந்த்ரோபிக் மற்றும் என்விடியா ஆகிய முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் டொனால்ட் டிரம்ப் நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இச்சந்திப்பில், ஏஐ மாடல்களைக் கண்காணிக்க தன்னாட்சி பெற்ற வெளிப்புற தணிக்கையாளர்களைப் பயன்படுத்துவது மற்றும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தடுப்பது உள்ளிட்ட சுயக்கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை ஏஐ தொழில்நுட்பத்திற்கான அரசியலமைப்பு என டிரம்ப் வர்ணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டேட்டா சென்டர்கள்

டேட்டா சென்டர்களின் விரைவான விரிவாக்கத்திற்கு டிரம்ப் ஆதரவு

ஏஐ தொழில்நுட்பத்தின் அபாயங்கள் குறித்துக் கவனம் செலுத்தும் அதேவேளையில், அமெரிக்காவில் ஏஐ உள்கட்டமைப்பை அதிவேகமாக விரிவாக்கம் செய்ய டிரம்ப் முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய டேட்டா சென்டர்கள் அமைப்பதைக் தீவிரப்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் ஏற்படும் மின்சார நுகர்வு மற்றும் கட்டண உயர்வு குறித்த மக்களின் கவலைகளுக்குப் பதிலளித்த டிரம்ப், இந்த பிரம்மாண்டமான தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளூர் சமூகங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

கவலைகள்

ஏஐ அபாயங்கள் குறித்த அதிகரித்துவரும் சர்வதேசக் கவலைகள்

சமீபகாலமாக ஏஐ ஏஜென்ட்கள் எதிர்பாராத விதமாக செயல்பட்டு, பிற நிறுவனங்களின் தொழில்நுட்ப அமைப்புகளுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதுபோன்ற பாதுகாப்புக் குறைபாடுகளைத் தடுப்பதே புதிய பணிக்குழுவின் முதன்மைப் பணியாகும்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுவாழ்வில் ஏஐ முக்கியப் பங்கு வகிப்பதால், டொனால்ட் டிரம்பின் ஏஐ ஜார் ஆகச் செயல்படும் ஜே கிளேட்டன் தலைமையிலான இக்குழு, அமெரிக்காவின் ஏஐ கொள்கையை வடிவமைப்பதில் மிக முக்கியமான பங்கைக் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT