Loading...
'12.5 கோடி மக்கள் வாக்கு!': பிரேசில் தேர்தலை இந்தியாவின் தேர்தல் எனக் குழப்பிய டொனால்ட் டிரம்ப்
பிரேசில் தேர்தலை இந்தியாவின் தேர்தல் எனக் குழப்பிய டொனால்ட் டிரம்ப்

'12.5 கோடி மக்கள் வாக்கு!': பிரேசில் தேர்தலை இந்தியாவின் தேர்தல் எனக் குழப்பிய டொனால்ட் டிரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 05, 2026
12:44 pm

செய்தி முன்னோட்டம்

பிரேசில் நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலை குறிப்பிடுவதற்கு பதிலாக, இந்திய அதிபர் தேர்தல் எனத் தவறாக குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட டொனால்ட் டிரம்ப், "இந்தியாவின் அதிபர் தேர்தலின் முதல் சுற்றில் இன்று 12.5 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர்" எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், அமெரிக்காவின் டெட்ராய்ட் மற்றும் பிலடெல்பியா போன்ற நகரங்களில் தேர்தல் முடிவுகளைக் கணக்கிட வாரக்கணக்கில் ஆகும் எனக் சுட்டிக்காட்டி, அமெரிக்கத் தேர்தல் முறை ஊழல் நிறைந்தது என்றும் சாடியிருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

தேர்தல்

பிரேசில் தேர்தல் நிலவரம்

உண்மையில், அக்டோபர் 4 அன்று பிரேசில் நாட்டில்தான் அதிபர் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் சுமார் 12.5 கோடி பிரேசில் மக்கள் வாக்களித்தனர்.

தேர்தலில் ஃபிளாவியோ போல்சனாரோ 47% வாக்குகளுடனும், தற்போதைய அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா 45% வாக்குகளுடனும் முன்னிலையில் உள்ளனர்.

இரு வேட்பாளர்களும் பெரும்பான்மை பெறாததால், அக்டோபர் 25 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இந்திய தேர்தல்

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் முறை

இந்தியாவில் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க நேரடியாக மக்கள் வாக்களிக்கும் முறை கிடையாது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய 'தேர்வாளர் குழு' மூலமே மறைமுகத் தேர்தல் வழியில் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

தற்போதைய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு 2022-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றி வருகிறார்.

முன்னதாக, அமெரிக்க தேர்தலில் கடுமையான அடையாளச் சான்று விதிகளை வலியுறுத்தும் வகையில் 'சேவ் அமெரிக்கா' சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த டிரம்ப், இந்தியத் தேர்தல் முறையைப் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT