Loading...
'உண்மையான போரே ஆன்மீகம்தான்!' ராணுவ தலைமையகத்தில் புதிய மத விவகாரங்கள் அலுவலகத்தை உருவாக்கியது அமெரிக்கா
ராணுவ தலைமையகத்தில் புதிய மத விவகாரங்கள் அலுவலகத்தை உருவாக்கியது அமெரிக்கா

'உண்மையான போரே ஆன்மீகம்தான்!' ராணுவ தலைமையகத்தில் புதிய மத விவகாரங்கள் அலுவலகத்தை உருவாக்கியது அமெரிக்கா

எழுதியவர் Sekar Chinnappan
Oct 02, 2026
04:13 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனில் மத விவகாரங்கள் அலுவலகம் என்ற புதிய அமைப்பை உருவாக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த சிறப்பு அலுவலகம் நேரடியாக பாதுகாப்பு செயலாளரின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் என்றும், ராணுவப் பிரிவுகளில் உள்ள மத போதகர்கள் மற்றும் ஆன்மீக ஆதரவு அமைப்புகளுக்கு தேவையான உயர்மட்ட வழிகாட்டுதல்களை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

பீட் ஹெக்செத்தின் உரை

உண்மையான போர் ஆன்மீக ரீதியானது

வர்ஜீனியாவில் உள்ள குவாண்டிகோ கடற்படை தளத்தில் ராணுவ மத போதகர்கள் மத்தியில் உரையாற்றிய பீட் ஹெக்செத், "நமது பாதுகாப்புத் துறை கடவுளின் கவசத்தை அணிந்துகொள்கிறது.

நாம் புவிசார் உடற்போரை நடத்தினாலும், உண்மையான போராட்டம் ஆன்மீக ரீதியானது என்பதை நாம் அறிவோம்." என்று கூறினார்.

மேலும், பைபிளின் வசனங்களை மேற்கோள் காட்டிய அவர், ராணுவ சமநிலையையும் ஆன்மீக வலிமையையும் மேம்படுத்துவதே இப்புதிய அலுவலகத்தின் நோக்கம் என்றும் விவரித்தார்.

எதிர்ப்பு

மதச்சார்பற்ற அமைப்புகளின் கடும் எதிர்ப்பு

ஹெக்செத்தின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவில் உள்ள மதச்சார்பின்மை அமைப்புகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மதமும் அரசும் தனித்தனியாக இயங்க வேண்டும் என்ற அமெரிக்கக் கொள்கைக்கு எதிராக, ஹெக்செத் கிறிஸ்தவ மதத்திற்கு ராணுவத்தில் முன்னுரிமை அளிப்பதாக அமெரிக்கன்ஸ் யுனைடெட் அமைப்பின் தலைவர் ரேச்சல் லேசர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, ராணுவப் பட்டியலில் அங்கீகரிக்கப்பட்ட மதங்களின் எண்ணிக்கையை 200-லிருந்து 31 ஆக ஹெக்செத் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மாற்றம் 

ராணுவ குடும்பங்கள் மற்றும் மனநல சேவைகளில் மாற்றம்

புதிய பென்டகன் வழிகாட்டுதல்களின்படி, இப்புதிய மத அலுவலகம் ராணுவ குடும்பங்களின் குழந்தைகளுக்கு ஆன்மீக அடிப்படையிலான வீட்டுப்பாட ஆதரவு மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஆன்மீக வழிகாட்டுதல்களை வழங்கும்.

ராணுவ வீரர்களிடையே நிலவும் மன அழுத்தத்திற்கு மருத்துவ ரீதியான சிகிச்சைகளைக் காட்டிலும், ஆன்மீகம் மற்றும் கடவுள் நம்பிக்கையின் வழியிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் ஹெக்செத் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

ADVERTISEMENT