ரிலையன்ஸ் நிறுவனத்துடன் வெனிசுலா கச்சா எண்ணெய் பகிர்வு குறித்து மார்க்கோ ரூபியோ முக்கிய பேச்சு
செய்தி முன்னோட்டம்
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ, முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்துடன் வெனிசுலா கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மும்பை தாஜ் நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவை "எண்ணெய் சுத்திகரிப்பு சூப்பர் பவர்" என்று மனதாரப் பாராட்டியுள்ளார். கனரகக் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் தொழில்நுட்பத் திறன் இந்தியாவிற்கு அதிக அளவில் இருப்பதாகக் குறிப்பிட்ட மார்க்கோ ரூபியோ, உலகளாவிய எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது எனக் கூறினார்.
ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
வெனிசுலாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பது மற்றும் அங்குள்ள எண்ணெய் வயல்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பாக விரிவாகப் பேசப்படவுள்ளது.
உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை வெனிசுலா எண்ணெய் உடனடியாக முழுமையாகத் தீர்த்துவிட முடியாது என்ற போதிலும், குறுகிய காலத்தில் அது பெரும் உதவியாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பு உறவு
இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மிக விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என்றும் ரூபியோ நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், குவாட் கூட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், வர்த்தகம் மற்றும் மூலோபாயக் கூட்டாண்மையில் இந்தியா அமெரிக்காவின் தவிர்க்க முடியாத பங்களிப்பாளர் என்று புகழாரம் சூட்டினார்.
மும்பை வந்தடைந்த மார்க்கோ ரூபியோ மற்றும் அவரது மனைவி ஜெனெட் ரூபியோவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உற்சாகமாக வரவேற்றது.