Loading...
ஐடி துறையில் மீண்டும் அதிர்ச்சி! 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு (Buyout) ஆஃபர் வழங்கிய Microsoft
60,000 ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது

ஐடி துறையில் மீண்டும் அதிர்ச்சி! 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு (Buyout) ஆஃபர் வழங்கிய Microsoft

எழுதியவர் Venkatalakshmi V
Oct 27, 2026
08:18 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத் துறையில் தனது முதலீடுகளை பல நூறு பில்லியன் டாலர்களாக கணிசமாக அதிகரிக்கும் நோக்கில், செலவுகளை கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடாவை சேர்ந்த சுமார் 60,000 ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது. Microsoft நிறுவனத்தில் 'லெவல் 70' மற்றும் அதற்கு கீழ் பொறுப்பில் உள்ள தகுதியான ஊழியர்களுக்கு இந்தத் தற்காலிக விருப்ப ஓய்வு திட்டம் வழங்கப்படவுள்ளது. இது நிறுவனத்தின் உலகளாவிய 2,23,000 ஊழியர் படையில் கால் பங்கிற்கும் (25% மேல்) அதிகமான எண்ணிக்கையாகும்.

விருப்ப ஓய்வு

பாதிக்கப்படும் துறைகள்

AI அனுபவங்கள், கோபைலட், நிதித் துறை, மனிதவள மேம்பாடு, Xbox மற்றும் விண்டோஸ் பிரிவுகளில் உள்ள தகுதியான ஊழியர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும்.

மார்க்கெட்டிங், வணிகக் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

செலவுக் கட்டுப்பாடு

AI தொழில்நுட்ப முதலீடுகளும் செலவுக் கட்டுப்பாடும்

2026-ஆம் நிதியாண்டில் மட்டும் AI உள்கட்டமைப்பு மற்றும் தரவு மையங்களுக்காக $175 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய Microsoft திட்டமிட்டுள்ளது.

AI முதலீடுகளுக்கான பலன் உடனடியாக கிடைக்க தாமதமாகும் நிலையில், ஊழியர்களின் விருப்ப ஓய்வு மூலம் செலவுகளைச் சரிசெய்ய நிறுவனம் முயன்று வருகிறது.

கடந்த ஜூலை மாதத்தில் எக்ஸ்பாக்ஸ் கேமிங் பிரிவைச் சேர்ந்த 4,800 ஊழியர்களை நீக்கியதைத் தொடர்ந்து, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருப்ப ஓய்வு திட்டம் உலகளாவிய ஐடி ஊழியர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

ADVERTISEMENT