Loading...
உக்ரைன் கொள்கையில் மாற்றமா? பரவும் தகவல்களுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ முற்றுப்புள்ளி
உக்ரைன் அதிபர் பேச்சுவார்த்தைக்காக வேறு ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் அழுத்தம் தருகிறது

உக்ரைன் கொள்கையில் மாற்றமா? பரவும் தகவல்களுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ முற்றுப்புள்ளி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 20, 2026
05:32 pm

செய்தி முன்னோட்டம்

உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்குவதிலும் உளவுத் தகவல்களைப் பகிர்வதிலும் அமெரிக்கா தாமதம் செய்வதாகவும், தனது கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் வெளியாகும் செய்திகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ திட்டவட்டமாக மறுத்துள்ளார். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள மார்க்கோ ரூபியோ, அக்டோபர் 20 அன்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் சுமார் 45 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினார். அப்போது உக்ரைனின் தற்போதைய வான் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் ரஷ்யாவுடனான போர் நிலவரம் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். உக்ரைன் விவகாரத்தில் வாஷிங்டனின் அரசியல் நிலைப்பாட்டில் எந்தவிதத் திட்டமிட்ட மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் வழக்கம் போல் தொடர்வதாகவும் ரூபியோ தெளிவுபடுத்தினார்.

நடவடிக்கைகள்

போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்பின் நடவடிக்கைகள்

உக்ரைன் கோரும் பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளை வாங்க உலகின் பல நாடுகளும் போட்டியிடுகின்றன.

எனவே, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா வேண்டும் என்றே மறுப்பதாகக் கூறுவது தவறானது என அவர் குறிப்பிட்டார்.

ரஷ்ய அதிபர் புடினை அமைதி பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவரும் நோக்கில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யா மீதான புதிய தடைகளைத் தற்காலிகமாக தள்ளுபடி செய்துள்ளார்.

மேலும், உக்ரைன் அதிபர் பேச்சுவார்த்தைக்காக வேறு ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்றும் டிரம்ப் நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குளிர்காலம் தொடங்கும் சூழலில் உக்ரைனின் மின்சாரம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளை இலக்கு வைத்து ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால் வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் தேவை உக்ரைனுக்கு மிக அத்தியாவசியமாக மாறியுள்ளது.

ADVERTISEMENT