அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே புதிய டீசர் வெளியீடு: ஏமாற்றத்தில் மார்வெல் ரசிகர்கள்
செய்தி முன்னோட்டம்
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் புதிய பிரத்யேக டீசர், அமெரிக்காவின் பிரபல வேர்ல்ட் சீரிஸ் பேஸ்பால் போட்டியின் போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ராபர்ட் டவுனி ஜூனியர் அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்குப் பதிலாக வில்லன் டாக்டர் டூம் வேடத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் இத்திரைப்படம், வரும் டிசம்பர் 18-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள சூழலில், விளம்பர உத்தியாக வெளியிடப்பட்ட இந்த டீசரில் புதிய காட்சிகள் குறைவாக இருந்ததால் இணையத்தில் மார்வெல் ரசிகர்களிடையே சற்று கலவையான கருத்துக்கள் எழுந்துள்ளன.
டாக்டர் டூம் மிரட்டல்
பேஸ்பால் மைதானத்தில் அவெஞ்சர்ஸ்
மில்வாக்கி ப்ரூவர்ஸ் மற்றும் தம்பா பே ரேஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் உலகத் தொடர் போட்டியின் போது இந்த விளம்பர வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
அதில் மிஸ்டர் பென்டாஸ்டிக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பருத்தி பாஸ்கல் பேஸ்பால் மைதானத்தில் பந்தை வீசுவது போன்ற சுவாரசியமான காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து ஸ்டீவ் ரோஜர்ஸாக கிறிஸ் எவன்ஸ், தோராக கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பிளாக் பாந்தராக லெட்டிடியா ரைட், ஆன்ட்-மேனாக பால் ரூட் மற்றும் கேப்டன் அமெரிக்காவாக அந்தோனி மேக்கி ஆகியோர் தோன்றும் ஆக்ஷன் காட்சிகள் மின்னல் வேகத்தில் காட்டப்படுகின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒட்டுமொத்த மார்வெல் உலகத்திற்கும் மாபெரும் அச்சுறுத்தலாக விளங்கும் டாக்டர் டூம் தோன்றி மிரட்டுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரசிகர்களின் எதிர்வினை
பிரம்மாண்ட நட்சத்திரப் பட்டாளம்
பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்ட இந்த முன்னோட்டத்தில் வெறும் சில வினாடிகள் மட்டுமே புதிய காட்சிகள் இடம்பெற்றிருந்ததாகவும், பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே பார்த்தவை போன்றே இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், படத்தின் முக்கியத் திருப்புமுனைகளை முன்கூட்டியே காட்டாமல் ரகசியமாக வைத்திருப்பதே திரையரங்க அனுபவத்திற்கு நல்லது என்று மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நியூ அவெஞ்சர்ஸ், பென்டாஸ்டிக் 4, வகாண்டா வீரர்கள் மட்டுமின்றி, பேராசிரியர் எக்ஸ், மேக்னடோ உள்ளிட்ட ஒரிஜினல் எக்ஸ்-மென் கதாப்பாத்திரங்களும் இணையவுள்ளன.
இப்படத்தைத் தொடர்ந்து அடுத்த பாகமான அவெஞ்சர்ஸ்: சீக்ரெட் வார்ஸ் 2027 டிசம்பர் 17 அன்று வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.