அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை: 7 நிபந்தனைகளை முன்வைத்து கத்தாரின் மத்தியஸ்தத்தை நிராகரித்த ஈரான்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் தீவிர போர்ப் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் கத்தார் நாட்டை சேர்ந்த மத்தியஸ்தர்கள் தெஹ்ரானுக்கு சென்றுள்ள சூழலில், தங்களின் 7 நிபந்தனைகளை ஏற்கும் வரை அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் கௌசார்தி ஊடகங்களிடம் கூறுகையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தற்போதைய சூழலில் அர்த்தமற்றது என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானின் அணுசக்தித் திறனை முடக்குவதையும், ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை பறிப்பதையுமே அமெரிக்கா முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
அடுத்தகட்ட நடவடிக்கை
டொனால்ட் டிரம்ப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை
ஈரான் மற்றும் ஹவுதி அமைப்பினரின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் செய்வதா அல்லது மீண்டும் ராணுவத் தாக்குதலைத் தொடங்குவதா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்க உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வரவிருக்கும் இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக பாரசீக வளைகுடா பகுதிக்கு 3-வது விமானம் தாங்கிக் கப்பல் படையை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
கத்தாரின் மத்தியஸ்த முயற்சிகள் தொடர்ந்தாலும், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் தூதரக அளவிலான தீர்வு காண்பதில் தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவி வருகிறது.