Loading...
வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்த டிரம்பின் செல்வாக்கு; என்ன காரணம்?
அதிபர் டொனால்ட் டிரம்பின் மக்கள் ஆதரவு நிலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு 31 சதவீதமாக சரிந்துள்ளது

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்த டிரம்பின் செல்வாக்கு; என்ன காரணம்?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 20, 2026
02:13 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி இடைக்கால நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்பின் மக்கள் ஆதரவு நிலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு 31 சதவீதமாக சரிந்துள்ளதாக ராய்ட்டர்ஸ்/இப்சாஸ் நடத்திய புதிய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அதிபர் டிரம்பின் இரு ஆட்சி பணிக்காலங்களிலும் பதிவான மிகக் குறைந்தபட்ச ஆதரவு நிலை இதுவாகும். தற்போதைய நிலவரப்படி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு ஜனநாயகக் கட்சிக்கு 47% வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். குடியரசுக் கட்சிக்கு 35% வாக்காளர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஜனநாயகக் கட்சி, ஆளும்கட்சியான குடியரசுக் கட்சியை விட 12 புள்ளிகள் வித்தியாசத்தில் வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளது.

காரணிகள்

பெட்ரோல் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப் பின்னடைவு

பெண் வாக்காளர்களிடையே ஜனநாயகக் கட்சிக்கு 50% ஆதரவு கிடைத்துள்ளதே இந்த பிரம்மாண்ட முன்னிலைக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஈரான் மீதான ராணுவத் தாக்குதலுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் பெட்ரோல் விலைகள் கணிசமாக உயர்ந்தன.

இது அமெரிக்கக் குடும்பங்களின் வரவு செலவுத் திட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக் கணிப்பில் பங்கேற்ற அமெரிக்கர்களில் 68% பேர் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதில் 37% குடியரசுக் கட்சி ஆதரவாளர்களும் அடங்குவர்.

இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபை அல்லது செனட் சபையைக் கைப்பற்றினால், டிரம்பின் எஞ்சிய இரண்டாண்டு ஆட்சிக்காலத்தில் புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளைக் கொண்டுவருவது பெரும் சவாலாக மாறும்.

ADVERTISEMENT