Loading...
அமெரிக்க வங்கிகளை அச்சுறுத்தும் AI ஏஜென்டுகள்: வாடிக்கையாளர் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பச் சவால்கள்
அமெரிக்க வங்கிகள் AI ஏஜென்டுகளால் கடுமையான பாதுகாப்புச் சவால்களை எதிர்கொண்டுள்ளன

அமெரிக்க வங்கிகளை அச்சுறுத்தும் AI ஏஜென்டுகள்: வாடிக்கையாளர் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பச் சவால்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 23, 2026
11:33 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் முன்னணி வங்கிகளான மார்கன் ஸ்டான்லி, ஜேபி மோர்கன் சேஸ், பேங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் சிட்டி போன்ற நிதி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் கணக்குகளை அணுகும் செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜென்டுகளால் கடுமையான பாதுகாப்புச் சவால்களை எதிர்கொண்டுள்ளன. வாடிக்கையாளர்களின் தெளிவான அறிவுறுத்தல்கள் இன்றி, பணம் அனுப்புவது, கொள்முதல் செய்வது அல்லது வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தொடர்புகொள்வது போன்ற பணிகளில் இந்த AI ஏஜென்டுகள் தன்னிச்சையாகச் செயல்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஒரு கணக்கினை இயக்குவது மனிதர்களா அல்லது AI ஏஜென்ட்டா என்பதைத் துல்லியமாகப் பிரித்தறிவதில் வங்கிகள் தொழில்நுட்பச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

Read-Only முறை

இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மார்கன் ஸ்டான்லி மற்றும் ஜேபி மோர்கன் உள்ளிட்ட வங்கிகள் மூன்றாம் தரப்பு AI ஏஜென்டுகள் தங்கள் தளங்களை அணுகுவதை தீவிரமாக கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளன.

பயனர்கள் யாரும் தங்கள் நுகர்வோர் தகவல்களை பிறரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என வங்கிகள் எச்சரித்துள்ளன. அதேவேளையில், பயனர்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, பணப் பரிமாற்றங்கள் எதையும் செய்யாமல் கணக்கை பார்வையிட மட்டும் உதவும் Read-Only அணுகல் முறையை வழங்குவது குறித்து வங்கிகள் பரிசீலித்து வருகின்றன.

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைந்து பலப்படுத்தும் கட்டாயத்தில் வங்கிகள் உள்ளன.

ADVERTISEMENT