Loading...
பெட்ரோல் விலை 20.3% அதிரடி உயர்வு! அமெரிக்காவில் பணவீக்கம் எகிறியது! வட்டி விகிதத்தைக் குறைக்க ஃபெடரல் வங்கி பிடிவாதம்
அமெரிக்காவில் பணவீக்கம் எகிறியது

பெட்ரோல் விலை 20.3% அதிரடி உயர்வு! அமெரிக்காவில் பணவீக்கம் எகிறியது! வட்டி விகிதத்தைக் குறைக்க ஃபெடரல் வங்கி பிடிவாதம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 16, 2026
11:22 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கப் பொருளாதாரத்தில் பணவீக்கம் மேலும் மோசமடைந்துள்ளது. அமெரிக்கத் தொழிலாளர் புள்ளியியல் அலுவலகம் வியாழக்கிழமை (அக்டோபர் 15) அன்று வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டின் மொத்த விற்பனை பணவீக்கக் குறியீடு (PPI) செப்டம்பர் மாதத்தில் 6.3% ஆக உயர்ந்துள்ளது. இது டிசம்பர் 2022-க்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த ஆண்டளவிலான விலையேற்றமாகும். செப்டம்பர் மாதத்தில் மட்டும் உற்பத்தியாளர் விலைக் குறியீடு 1.3% உயர்ந்துள்ளது, இது மார்ச் 2022-க்கு பிறகான மிக வேகமான மாதாந்திர உயர்வாகும்.

எரிபொருள் விலை உயர்வு

எரிசக்தி மற்றும் பெட்ரோல் விலை அதிரடி உயர்வு

செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்ட இந்த செங்குத்தான பணவீக்க உயர்வுக்கு நாட்டின் எரிசக்தி விலையேற்றமே முதன்மைக் காரணமாக அமைந்தது.

மொத்தப் பணவீக்க உயர்வில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை எரிசக்தித் துறையே வகித்துள்ளது.

செப்டம்பரில் ஒட்டுமொத்த எரிபொருள் விலைகள் 10.8% உயர்ந்ததுடன், பெட்ரோல் விலை ஒரே மாதத்தில் 20.3% வரை அதிரடியாக அதிகரித்தது.

மேலும் டீசல், விமான எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் விலைகளும் கணிசமாக உயர்ந்தன. உணவுப் பொருட்களின் விலையும் 1.2% வரை அதிகரித்துள்ளது.

சேவைத் துறை 

சேவைத் துறையிலும் பரவும் விலையேற்ற அழுத்தம்

பொருட்களின் உற்பத்திச் செலவு மட்டுமின்றி, சேவைத் துறையின் மொத்த விற்பனைக் கட்டணங்களும் செப்டம்பரில் 0.8% உயர்ந்துள்ளன.

குறிப்பாகப் பொருட்களின் சரக்குப் போக்குவரத்து மற்றும் சேமிப்புக் கிடங்குச் சேவைகளின் கட்டணங்கள் 3.4% வரை உயர்ந்துள்ளன.

இது பொருட்கள் விநியோகம் செய்யும் வணிக நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகளைப் பெருமளவில் அதிகரிக்கும்.

உணவு மற்றும் எரிசக்தி அல்லாத பிற அடிப்படையான உற்பத்தியாளர் விலைக் குறியீடு செப்டம்பரில் 0.5% உயர்ந்து, ஆண்டளவில் 5.0% ஐ எட்டியுள்ளது.

ADVERTISEMENT

வட்டி விகிதம்

உலகளாவிய சந்தை தாக்கம் மற்றும் வட்டி விகித அச்சம்

அமெரிக்க நுகர்வோர் பணவீக்கம் 3.7% ஆக அதிகரித்ததைத் தொடர்ந்து, தற்போது மொத்த விற்பனைப் பணவீக்கமும் 6.3% ஆக உயர்ந்துள்ளது, அமெரிக்க ஃபெடரல் வங்கி தனது வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு உயர் மட்டத்திலேயே வைத்திருக்கக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட்டி விகிதங்கள் மேலும் உயர்த்தப்பட்டால் அல்லது குறைக்கப்படாமல் தள்ளிப்போனால், அது உலகளாவிய பங்குச் சந்தைகள், கரன்சி மதிப்புகள் மற்றும் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT