Loading...
ஏரியா 51 அருகே பயங்கரம்! வேற்றுக்கிரக உயிரினங்களுடன் மோதி அமெரிக்க ராணுவ வீரர் பலி?
ஏரியா 51 அருகே வேற்றுக்கிரகவாசிகளுடன் நடந்த சண்டையில் அமெரிக்க வீரர் பலியானதாக அமெரிக்க ராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.

ஏரியா 51 அருகே பயங்கரம்! வேற்றுக்கிரக உயிரினங்களுடன் மோதி அமெரிக்க ராணுவ வீரர் பலி?

எழுதியவர் Vasuki
Oct 17, 2026
04:50 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் நெவாடா பாலைவனத்தில் உள்ள ஏரியா 51 ராணுவ தளத்திற்கு அருகே, ஊர்வன வகையைச் சேர்ந்த வேற்றுக்கிரக உயிரினங்களுடன் (Reptilian beings) அமெரிக்க சிறப்புப் படை வீரர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகவும், அதில் வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும் முன்னாள் அமெரிக்க ராணுவ ஸ்னைப்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். பறக்கும் தட்டுகள் மற்றும் ஏலியன் மர்மங்களுக்குப் புகழ்பெற்ற இந்த தளத்தில் நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம், தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லாதபோதிலும், இத்தகவல் சமூக வலைத்தளங்களில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.

ரகசிய சுரங்கம்

விநோத உயிரினங்களுடன் மோதல்

அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் ஸ்னைப்பரும், லிபர்ட்டி ரிஸ்க் என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான நிக் பெட்ஸ் இந்த அதிரடித் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் கூட்டு சிறப்பு நடவடிக்கைகள் கட்டளையகத்தில் பணியாற்றிய வீரர் ஒருவர் தன்னிடம் இந்தச் சம்பவத்தைக் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெவாடாவின் நிலத்தடி ரகசிய தளத்தில் வயர்லெஸ் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, வழக்கமான தோட்டாக்களுக்குப் பதிலாக நவீன ஆற்றல் ஆயுதங்களுடன் அமெரிக்க வீரர்கள் சுரங்கப் பகுதிக்குள் அனுப்பப்பட்டனர்.

அங்கு இரண்டு கால்களால் நடக்கக்கூடிய, விரல்களுடன் கூடிய மனித பல்லி போன்ற மூன்று விநோத உயிரினங்களை வீரர்கள் எதிர்கொண்டதாகவும், இருதரப்பிற்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

ஆதாரம் இல்லை

உடலை எரித்து மூடிமறைத்ததாகக் குற்றச்சாட்டு

இந்த மோதலில் அமெரிக்க வீரர் ஒருவர் மார்பில் குண்டு பாய்ந்து உயிரிழந்த நிலையில், வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் அந்த மூன்று விநோத உயிரினங்களும் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த அமெரிக்க வீரரின் உடல் அங்கேயே உடனடியாக எரிக்கப்பட்டு, ராணுவப் பயிற்சி விபத்தில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாகப் பொய் கதை உருவாக்கப்பட்டு மூடிமறைக்கப்பட்டதாக பெட்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து வெளியே பேச முயன்றபோது சக வீரர் ஒருவர் தனது கழுத்தைப் பிடித்து சுவரில் தள்ளி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்ததகவல்கள் தனிப்பட்ட நபரின் கூற்றுகளாக மட்டுமே உள்ள நிலையில், வேற்றுக்கிரகவாசிகள் அல்லது பறக்கும் தட்டுகள் இருப்பதற்கான எந்தவொரு உறுதியான ஆதாரமும் இதுவரை இல்லை என்றே அமெரிக்க ராணுவமும் வெள்ளை மாளிகையும் தெரிவித்து வருகின்றன.

ADVERTISEMENT