யூடியூப்பிற்கு போட்டியாக களமிறங்கிய இன்ஸ்டாகிராம்: இனி 90 நிமிட நீள வீடியோக்கள் 'Features' மூலம் வெளியிடலாம்
செய்தி முன்னோட்டம்
குறுகிய வடிவ வீடியோக்களான ரீல்ஸ் மூலமாக உலகளவில் வரவேற்பை பெற்ற இன்ஸ்டாகிராம் நிறுவனம், தற்போது யூடியூப்பிற்குப் போட்டியாக நீண்ட நேர வீடியோக்களை வெளியிடும் வகையில் Features என்ற புதியஅம்சத்தை சோதித்து வருகிறது. இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொஸேரி மற்றும் தயாரிப்புத் தலைவர் டெஸ்ஸா லையன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, படைப்பாளிகள் இனி 90 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை இந்தப் புதிய அம்சத்தின் மூலம் பதிவேற்றம் செய்ய முடியும்.
நீண்ட வீடியோ
புதிய அணுகுமுறை
பயனர் தொடர்புகள் மற்றும் நண்பர்களுடனான பகிர்வுகள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தினால், நீண்ட வீடியோக்களை அனுமதிப்பதில் ஆடம் மொஸேரி நீண்டகாலமாகத் தயக்கம் காட்டி வந்தார்.
தற்போது குறுகிய ரீல்ஸ் வீடியோக்களையும் நீண்ட நேர வீடியோக்களையும் ஒன்றோடொன்று இணைத்து, பாட்காஸ்ட்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களை ஒரே தளத்தில் வழங்கும் வகையில் பரஸ்பர தொடர்பு கட்டமைக்கப்பட்டு வருகிறது.
சோதனை நிலை
டிஜிட்டல் திரைகளின் விரிவாக்கம்
ஸ்மார்ட் டிவிகளுக்கான இன்ஸ்டாகிராம் செயலி சமீபத்தில் சாம்சங், கூகுள் மற்றும் அமேசான் பயர் டிவி தளங்களில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, டிவி திரைகளிலும் இந்த நீண்ட நேர வீடியோக்களைப் பார்க்கும் வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது 'ஃபீச்சர்ஸ்' வசதியானது அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில படைப்பாளிகளுடன் முதற்கட்டமாகச் சோதிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவிரைவில் அனைத்து உலகளாவிய பயனர்களுக்கும் இந்த அம்சம் படிப்படியாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.