Loading...
பயங்கரவாதத்தை அரசு தந்திரமாகப் பயன்படுத்த முடியாது; அமெரிக்காவின் கருத்துக்கு பின் ஜெய்சங்கர் தடாலடி பதில்
அமெரிக்காவின் பாகிஸ்தான் நட்பு கருத்துக்கு பின் ஜெய்சங்கர் தடாலடி பதில்

பயங்கரவாதத்தை அரசு தந்திரமாகப் பயன்படுத்த முடியாது; அமெரிக்காவின் கருத்துக்கு பின் ஜெய்சங்கர் தடாலடி பதில்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 25, 2026
07:00 pm

செய்தி முன்னோட்டம்

பயங்கரவாதத்தை பிற நாடுகளுக்கு எதிரான ஒரு அரசு தந்திரமாக பயன்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சின்மயா மிஷன் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், பயங்கரவாதத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்தவோ அல்லது நியாயமானதாகக் காட்டவோ முடியாது என வலியுறுத்தினார். அமைதிக்கு மிகவும் அச்சுறுத்தலாகத் திகழும் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கண்டனம்

அரசியல் கணக்கீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நாடுகளுக்குக் கண்டனம்

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையைக் காட்டாத வரை இந்தப் பிரச்சனை தொடரவே செய்யும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்தார்.

வரலாறு பல படிப்பினைகளைக் கற்றுக்கொடுத்த போதிலும், சில நாடுகள் இன்னும் தங்களின் சுய அரசியல் கணக்கீடுகளுக்கு முன்னுரிமை அளித்து பயங்கரவாதத்தை சகித்துக் கொள்கின்றன என எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் சாடினார்.

பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் ஒழிக்க சர்வதேச சமூகம் உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவின் கருத்து மற்றும் பின்னணி

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அண்மையில் இந்தியாவிற்கு வருகை தந்த போது, பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவை நியாயப்படுத்தி பேசியிருந்தார்.

பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பது பயங்கரவாதத்திற்கு எதிரான முடிவுகளில் தாக்கம் செலுத்த உதவும் என்றும், இந்த உறவு இந்தியாவுடனான நட்பைப் பாதிக்காது என்றும் மும்பையில் பேட்டியளித்திருந்தார்.

மார்க் ரூபியோவின் இந்த கருத்துக்கள் வெளியான சில நாட்களிலேயே, அரசியல் கணக்கீடுகள் குறித்து ஜெய்சங்கர் பேசியுள்ளது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

அமைதி

உலகளாவிய அமைதி மற்றும் ராஜதந்திர பேச்சுவார்த்தையின் அவசியம்

தொடர்ந்து பேசிய ஜெய்சங்கர், உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் நடக்கும் போர் மற்ற அனைத்து பகுதிகளின் அமைதிக்கும் அச்சுறுத்தலாக அமையும் என எச்சரித்தார்.

உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்களில் நிலவும் மோதல்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், எந்தவொரு போரையும் முடிவுக்குக் கொண்டுவர ராஜதந்திர வழியிலான பேச்சுவார்த்தைகளே ஒரே தீர்வு என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாகக் கூறினார்.

இதன் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை உலக அரங்கில் அவர் மீண்டும் நிலைநிறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT