டிரம்பிற்கு நேரடி எச்சரிக்கை! ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சர் மெஹர்தாத் அக்லாகி அதிரடி
செய்தி முன்னோட்டம்
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலில் ஈரானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நசிர்சாதே மற்றும் உயர் ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சராகத் பாதுகாப்புத் துறை நிபுணர் மெஹர்தாத் அக்லாகி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார். ஈரானிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்று இவர் புதிய அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்புதிய நியமனம் மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேரடி எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை
பதவியேற்ற பிறகு ஆற்றிய முதல் உரையில் புதிய பாதுகாப்பு அமைச்சர் அக்லாகி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"அமெரிக்கா மீண்டும் ஏதேனும் தவறான கணக்கீடுகளை செய்தால் ஈரானின் பதில் மிகவும் ஆச்சரியமாகவும் பரந்த அளவிலும் இருக்கும்" என்று அவர் கூறினார்.
மேலும் "டிரம்ப் தனது படைகளைப் பிராந்தியத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
அவர் ஒரு குண்டை வீசினால் எத்தனை வீரர்கள் சடலங்களாகத் திரும்பப் போகிறார்கள் என்பதைப் பார்க்க நேரிடும்" என எச்சரித்தார்.
பாதுகாப்பில் உறுதி
நாட்டின் பாதுகாப்பில் உறுதியாக இருக்கும் ஈரான் அரசு
புதிய அமைச்சரின் நியமன உறுதிமொழியின் போது பேசிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், ஈரான் எந்தவொரு வெளிநாட்டின் அழுத்தத்திற்கும் பணியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
"நாங்கள் எங்கள் தாயகத்தை உறுதியுடன் பாதுகாப்போம், எதிரிகள் எங்கள் நிலத்தை ஆக்கிரமிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்று அவர் கூறினார்.
மேலும் புதிய பாதுகாப்பு அமைச்சர் அக்லாகி ஏற்கனவே அமெரிக்காவின் கொலைப் பட்டியலில் உள்ளதால், அவரது பாதுகாப்பை ஈரான் அரசு முழுமையாக உறுதி செய்யும் என்றும் அதிபர் உறுதியளித்தார்.
அமெரிக்கா
அமெரிக்காவின் தடைகளும் ஈரானின் அடுத்தகட்ட நகர்வுகளும்
ஈரானின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களின் தலைவராக இருந்த அக்லாகி, ஏவுகணைத் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியதற்காக ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐநாவின் தட எதிர்கொண்டவர் ஆவார்.
12 நாட்கள் போருக்குப் பிறகு ஈரானின் தற்காப்புத் திறன்கள் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், நாட்டின் ராணுவ வலிமையை அதிகரிக்கவும் சிறப்புப் பாதுகாப்பு மறுசீரமைப்புத் திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாக புதிய அமைச்சர் அறிவித்துள்ளார்.