Loading...
உலகப் போர் வந்தால் அமெரிக்காவின் மாற்றுத் திட்டம் என்ன? '90 நாட்கள்' தப்பிக்க பென்டகனின் வியூகம்
குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு தன்னிச்சையாக இயங்கும் வகையிலான அதிநவீனத் திட்டத்தை பென்டகன் தயாரித்து வருகிறது

உலகப் போர் வந்தால் அமெரிக்காவின் மாற்றுத் திட்டம் என்ன? '90 நாட்கள்' தப்பிக்க பென்டகனின் வியூகம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 26, 2026
02:14 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், உள்நாட்டில் மின்சார விநியோகக் கட்டமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும், அமெரிக்க ராணுவத் தளங்கள் குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு தன்னிச்சையாக இயங்கும் வகையிலான அதிநவீனத் திட்டத்தை பென்டகன் தயாரித்து வருகிறது. FORTRESS எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பில் உள்ள அனைத்து முக்கிய ராணுவத் தளங்களும் வெளி உதவிகள் இன்றி 90 நாட்களுக்குத் தொடர்ந்து செயல்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடிநீர், மின்சாரம், எரிபொருள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் இந்த தற்சார்புத் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும். அமெரிக்க தற்காப்புக்கு பொதுமக்களுக்கான மின்சார அமைப்புகளைச் சார்ந்திருப்பது ஆபத்தானது எனப் பென்டகன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மாற்று மின் உற்பத்தி

கையடக்க அணு உலைகள் மற்றும் மாற்று மின் உற்பத்தி

மின்சார தேவையை தடையின்றிப் பெற, கையடக்க அணு உலைகள், பெரிய அளவிலான பேட்டரி சேமிப்புக் அமைப்புகள் மற்றும் தனித்துவமான மைக்ரோ கிரிட்களைப் பயன்படுத்த பென்டகன் திட்டமிட்டுள்ளது.

இதைப் பயன்படுத்தி சிவில் மின்சார விநியோகக் கட்டமைப்பிலிருந்து ராணுவத் தளங்களை முழுமையாக தனிமைப்படுத்தி இயங்க வைக்க முடியும்.

நெருக்கடி காலங்களில் தனியார் மற்றும் சிவில் தொழிற்சாலைகளை உடனடியாக ராணுவ உற்பத்திக்கு மாற்றும் வகையில் 'சிவில் ரிசர்வ் மேனுஃபேக்ச்சரிங் நெட்வொர்க்' இந்தத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், முக்கியமான ஆயுதங்கள், உதிரிபாகங்கள், எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்குக் குறைந்தபட்சம் இரண்டு மாற்று விநியோக வழிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவை சுற்றியுள்ள பெருங்கடல்கள் மட்டுமே நாட்டிற்குப் பாதுகாப்பு என்ற எண்ணத்தை மாற்றி, அதிபர் டிரம்ப் புதிய அணுகுமுறையை முடுக்கிவிட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT