Loading...
ஒவ்வொரு குழந்தைக்கும் ஸ்பேஸ்எக்ஸ் பங்கு இலவசம்; பறக்கும் கார் சாதனைக்கு பின் எலான் மஸ்க் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
எலான் மஸ்க், ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டு உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்

ஒவ்வொரு குழந்தைக்கும் ஸ்பேஸ்எக்ஸ் பங்கு இலவசம்; பறக்கும் கார் சாதனைக்கு பின் எலான் மஸ்க் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 19, 2026
04:37 pm

செய்தி முன்னோட்டம்

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க், டெஸ்லாவின் 'பறக்கும் கார்' அறிமுகத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டு உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார். அமெரிக்காவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் 2027-ஆம் ஆண்டு முதல் தங்களின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளில் ஒன்றை இலவசமாக வழங்க உள்ளதாக தனது X தளப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுமார் 7.2 கோடி குழந்தைகள் உள்ளனர். தற்போதைய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பின்படி இத்திட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் 10.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 88,000 கோடிக்கும் அதிகம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பறக்கும் கார்

விண்வெளித் தொழில்நுட்பத்துடன் உருவான 'பறக்கும் கார்'

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள டெஸ்லாவின் புதிய தலைமுறை ரோட்ஸ்டர் காரின் சோதனை ஓட்டம் சமீபத்தில் டெக்சாஸில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்த மின்சார ஸ்போர்ட்ஸ் கார் 0 முதல் 100 கி.மீ வேகத்தை வெறும் 0.81 வினாடிகளில் எட்டி சாதனை படைத்துள்ளது.

இந்த அதிநவீன காருக்கான முன்பதிவைத் டெஸ்லா நிறுவனம் இந்தியாவிலும் தொடங்கியுள்ளது. த்ரஸ்ட் மாடலுக்கான முன்பதிவுக் கட்டணமாக ரூ. 2.50 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய ரோட்ஸ்டர் காரின் உற்பத்தி வரும் 2028-ஆம் ஆண்டு தொடங்கும் என்றும், முதற்கட்டமாக இடதுபுற ஓட்டுநர் இருக்கை கொண்ட கார்கள் சந்தைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT