LOADING...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: செய்தி

ஹென்லி குறியீடு 2026: இந்திய பாஸ்போர்ட் 78வது இடத்திற்கு சரிந்தது

சமீபத்திய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில், இந்தியாவின் பாஸ்போர்ட் மூன்று இடங்கள் சரிந்து 78-வது இடத்தைப் பிடித்துள்ளது.

12 May 2026
ஈரான்

ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்களுக்கு கட்டண வசூல் அமைப்பை ஈரான் அறிமுகப்படுத்தியது

ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்லும் கப்பல்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டணம் வசூலிப்பதற்கும் பாரசீக வளைகுடா ஜலசந்தி ஆணையம் (PGSA) என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளது.

ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படைகள்: அறிக்கை

ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, தனது வான் பாதுகாப்புப் படைகள் "தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக" ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

05 May 2026
அமெரிக்கா

அமெரிக்க ராணுவத்தின் முக்கிய போயிங் கேசி-135 விமானம் கத்தார் வான்பரப்பில் காணாமல் போனது

அமெரிக்க இராணுவத்தின் மிக முக்கியமான வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானமான போயிங் கேசி-135 ஸ்ட்ராடோடேங்கர், கத்தார் வானத்தில் காணாமல் போயுள்ளது.

ஈரானின் ஃபுஜைரா தாக்குதலில் 3 இந்தியர்கள் காயமடைந்தது 'ஏற்றுக்கொள்ள முடியாதது': பிரதமர் மோடி

ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள ஃபுஜைரா பெட்ரோலியத் தொழிற்சாலைகள் மண்டலத்தின் மீது ஈரான் நடத்திய சமீபத்திய தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் மேகங்கள்; 12 ஏவுகணைகளால் அமீரகம் மீது தாக்குதல்

மே 4 அன்று ஹார்முஸ் நீரிணை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) அடுத்தடுத்து நிகழ்ந்த ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் கடற்படை மோதல்கள் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

04 May 2026
அமெரிக்கா

ஈரான் ட்ரோன்களை வேட்டையாடும் இஸ்ரேலின் 'அயர்ன் பீம்': அமீரகத்திற்குப் பாதுகாப்பு அரண்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர், ஐக்கிய அரபு அமீரகத்தையும் ஒரு முக்கிய போர்க்களமாக மாற்றியுள்ளது.

பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் ஈரான், லெபனான், ஈராக் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்ய UAE தடை விதித்துள்ளது

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது குடிமக்கள் ஈரான், லெபனான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்வதற்குத் தடை விதித்துள்ளது.

30 Apr 2026
வர்த்தகம்

அடுத்த மாதம் ஐரோப்பா பறக்கும் பிரதமர் மோடி: செமிகண்டக்டர் துறையில் காத்திருக்கும் ஒப்பந்தம்

சர்வதேச வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவுகளைச் சரிசெய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் நான்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

OPEC எண்ணெய் கூட்டமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியேறுவது இந்தியாவிற்குப் பயனளிக்குமா?

ஐக்கிய அரபு அமீரகம் (UAE), மே 1 முதல் அமலுக்கு வரும் வகையில், பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து (OPEC) வெளியேறும் தனது முடிவை அறிவித்துள்ளது.

28 Apr 2026
எரிபொருள்

எண்ணெய் கூட்டமைப்பிலிருந்து UAE விலகல்! உலக சந்தையில் பெட்ரோல் விலை குறையுமா?

உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில், எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான OPEC மற்றும் OPEC+ அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

2028க்குள் 50% அரசு சேவைகள் ஏஐ மயமாகும்: உலகிலேயே முதன்முறையாக சாதனை படைக்கும் ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம் தனது அரசு நிர்வாகத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

அமீரகத்திடம் வாங்கிய $3.45 பில்லியன் கடனை அடைத்தது பாகிஸ்தான்; எப்படி?

பாகிஸ்தான் அரசு ஐக்கிய அரபு அமீரகத்திடம் (UAE) வாங்கியிருந்த பெரும் கடனை ($3.45 பில்லியன்) திருப்பி செலுத்தியுள்ளது.

அடுத்த குறி இண்டர்நெட் கேபிள்களா? ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய எச்சரிக்கை

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் தற்போது கடல்வழி எண்ணெய் விநியோகத்தைத் தாண்டி, கடலுக்கடியில் அமைந்துள்ள இணையத் தரவு கேபிள்கள் (Undersea Internet Cables) பக்கம் திரும்பியுள்ளது.

20 Apr 2026
ஈரான்

அமெரிக்காவை மிரட்டும் அமீரகம்? ஈரான் போரினால் வளைகுடாவில் உருவான டாலர் தட்டுப்பாடு!

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் ஈரான் போர், உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் 'பெட்ரோ-டாலர்' முறைக்கே சவால் விடுக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

20 Apr 2026
அமெரிக்கா

அமெரிக்கா -UAE உறவில் விரிசல்? ராணுவத் தளங்களை மூட அமீரகத்தில் கோரிக்கை

மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் தீவிர போரைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின்(UAE) பாதுகாப்பு வியூகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

17 Apr 2026
அமெரிக்கா

ஹார்முஸ் முற்றுகையால் விழிஞ்சம் துறைமுகத்தில் டிராபிக் ஜாம்; கேரள துறைமுகத்தில் 100 கப்பல்கள் வெயிட்டிங்

அமெரிக்கா, ஹார்முஸ் ஜலசந்தியில் விதித்துள்ள முற்றுகையின் காரணமாக, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் துறைமுகம், அதிகரித்து வரும் கப்பல் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது.

03 Apr 2026
துபாய்

'வில்லாவிலிருந்து போரை பார்க்கலாம்': கண்டனத்தை ஈர்க்கும் துபாய் ரியல் எஸ்டேட் முகவரின் விளம்பரம்

துபாயை சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவரான அபுபக்கர் சித்திக், ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கியவாறு அமைந்துள்ள ஆடம்பர வில்லாக்களுக்கான விளம்பர வீடியோ மூலம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

02 Apr 2026
ஈரான்

ட்ரம்ப் குடும்பத்தின் ட்ரோன் நிறுவனம் அமீரகத்துடன் ரகசியப் பேச்சுவார்த்தை? ஈரான் போருக்கு மத்தியில் ஆயுத விற்பனைக்குத் திட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகன்களால் ஆதரிக்கப்படும் 'Powerus' என்ற ட்ரோன் நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

30 Mar 2026
ஈரான்

ஈரான் -இஸ்ரேல் போர் தீவிரம்: அலுமினிய ஆலைகள் மீது தாக்குதல் முதல் அமெரிக்க கடற்படை வீரர்கள் வருகை வரை

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா -இஸ்ரேல் இடையிலான போர், தூதரகங்கள் தீர்வு காண்பதை விட அதிவேகமாக விரிவடைந்து வருகிறது.

30 Mar 2026
குவைத்

குவைத்தில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு இந்தியர் பலி; பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

27 Mar 2026
அமெரிக்கா

அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள வளைகுடா ஹோட்டல்கள் குறிவைக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை

பிராந்தியத்தில் அமெரிக்க படை வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலில் இப்போது முறையான இலக்குகளாகிவிட்டன என்று ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

27 Mar 2026
அமெரிக்கா

அமீரகத்தின் 5 முக்கிய இடங்கள் டார்கெட்: போர் வெடித்தால் குடிநீர், மின்சாரம் துண்டிக்கப்படும்

அமெரிக்கா தனது தரைப்படை வீரர்களைப் பயன்படுத்தி ஈரான் எல்லைக்குள் தாக்குதலைத் தொடங்கினால், அதற்குப் பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) மிக முக்கியமான ஐந்து எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

26 Mar 2026
ஈரான்

LPG to PNG: மத்திய அரசின் அதிரடி மாற்றம் ஏன்? முக்கிய விளக்கங்கள்!

மத்திய கிழக்கில் (ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையே) நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடை காரணமாக, இந்தியா தனது எரிசக்தி கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

20 Mar 2026
ஈரான்

போருக்கு நடுவே 'மெகா' ஆயுத பேரம்: 16.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா -லாபம் யாருக்கு?

ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது வளைகுடா நட்பு நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 16.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மார்ச் 19 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஈத் அல்-பித்ர் 2026: இந்தியாவில் பிறை தெரியும் நாள் மற்றும் பெருநாள் தேதிகள் குறித்த விபரங்கள்

இஸ்லாமிய நாட்காட்டியின்படி, ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்படுவதை பொறுத்தே ஈத் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

06 Mar 2026
போர்

துபாயில் வசிக்கும் மக்களுக்கு ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை; பீதியில் இந்தியர்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு இன்று அவசர கால ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

04 Mar 2026
ஈரான்

மத்திய கிழக்கு நெருக்கடி: சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கம்

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள மோதலால் வான்பரப்புகள் மூடப்பட்டு, சர்வதேச விமான போக்குவரத்து முடங்கியுள்ளது.

வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்குப் பாதுகாப்பு! UAE மீதான தாக்குதலுக்கு மோடி கண்டனம்; அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தல்

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈரான் போர் எதிரொலி: அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பாவிற்கான ஏர் இந்தியா விமானச் சேவைகள் நிறுத்தம்

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கான தனது அனைத்து விமான சேவைகளையும் மார்ச் 2 நள்ளிரவு வரை ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

01 Mar 2026
துபாய்

புர்ஜ் கலிஃபா அருகே தாக்குதல்! போரில் சம்பந்தமே இல்லாத UAE ஐ ஈரான் குறிவைப்பது ஏன்?

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் உலகப்புகழ் பெற்ற புர்ஜ் கலிஃபா பகுதிக்கு அருகே சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

27 Feb 2026
அமெரிக்கா

இஸ்ரேலில் முதல்முறையாக அமெரிக்காவின் F-22 விமானங்கள் - ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா?

அமெரிக்கா தனது அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களான 12 F-22 ராப்டர் விமானங்களை இஸ்ரேலில் உள்ள விமானப்படை தளங்களில் நிலைநிறுத்தியுள்ளது.

13 Feb 2026
இந்தியா

சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டின் தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்; எத்தனையாவது இடம் தெரியுமா?

ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியாவின் பாஸ்போர்ட் கடந்த ஆண்டு 85வது இடத்திலிருந்து 75வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

06 Feb 2026
பாலிவுட்

ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம்

பிரபல பாலிவுட் படமான 'உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்' புகழ் இயக்குனர் ஆதித்ய தாரின் இயக்கத்தில் வெளியான 'துரந்தர்' திரைப்படம், திரையரங்குகளை தொடர்ந்து ஓடிடி (OTT) தளத்திலும் வரலாற்று சாதனையை படைத்து வருகிறது.

02 Feb 2026
கத்தார்

கத்தார் 10 வருட ரெசிடென்சி திட்டத்தை அறிவித்துள்ளது: யாரெல்லாம் அப்ளை செய்யலாம்?

தொழில்முனைவோர் மற்றும் மூத்த நிர்வாகிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட 10 ஆண்டு ரெசிடென்சி திட்டத்தை கத்தார் தொடங்க உள்ளது.

'இந்தியா - UAE இடையிலான புதிய சகாப்தம்! அதிபர் ஷேக் முகமது பின் சயீத் வருகையின் முக்கிய அம்சங்கள்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று திங்கட்கிழமை (ஜனவரி 19) புதுடெல்லிக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் இது அவரது 5 வது இந்தியப் பயணமாகும்.

இந்தியா வந்தார் ஐக்கிய அரபு அமீரக அதிபர்; தேசியப் பாதுகாப்பு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்போவதாக தகவல்

இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஐக்கிய அரபு அமீரகத்தின்(UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

பாலைவன தேசத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை: துபாய், அபுதாபி ஸ்தம்பிப்பு; காரணம் என்ன?

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முக்கிய நகரங்களான துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நேற்று (டிசம்பர் 18) இரவு முதல் பெய்து வரும் அதீத கனமழையால் அந்நாடே வெள்ளத்தில் மிதக்கிறது.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 2025: UAEக்கு முதலிடம் - இந்தியாவுக்கு எந்த இடம்?

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் தரவரிசை பட்டியலில் இந்த முறை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முதலிடம் பிடித்துள்ளது.

1,435 குடிமக்களின் 475 மில்லியன் திர்ஹாம் கடனை ரத்து செய்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அரசு, தனது தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு முன்னதாக, நாட்டில் உள்ள 1,435 குடிமக்களின் 475 மில்லியன் எமிரேட்ஸ் திர்ஹாம் (AED) மதிப்புள்ள கடன்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; பின்னணி என்ன?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் நாட்டினருக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.

துபாய் விமானக் கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்து; விமானி உயிரிழப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற துபாய் விமானக் கண்காட்சி 2025 இல் சாகசப் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது.

14 Nov 2025
பாலிவுட்

பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல்வாதிகளுக்கு பார்ட்டி அரேஞ் செய்ததாக போதைப்பொருள் கடத்தல்காரர் பகீர்

சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நாடு கடத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான முகமது சலீம் முகமது சுஹைல் ஷேக், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் ரேவ் பார்ட்டிகளில் போதைப்பொருள் வழங்குவதாக அதிர்ச்சியூட்டும் கூற்றுக்களை வெளியிட்டுள்ளார்.

28 Oct 2025
யோகா

யோகாவை போட்டி விளையாட்டாக அங்கீகரிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) யோகா அல்லது யோகாசனத்தை ஒரு போட்டி விளையாட்டாக முறைப்படுத்த செயல்பட்டு வருவதாக தி நேஷனல் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி ஜப்பானை வீழ்த்தி 2026 டி20 உலகக்கோப்பைப் போட்டிக்குத் தகுதி

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), ஜப்பானுக்கு எதிரான போட்டியில் ஆதிக்கம் செலுத்தி, 2026 டி20 உலகக்கோப்பைக்குத் தகுதிபெற்ற 20வது மற்றும் கடைசி அணியாகத் தன்னை உறுதிப்படுத்தியுள்ளது.

முந்தைய
அடுத்தது