LOADING...
இந்தியா வந்தார் ஐக்கிய அரபு அமீரக அதிபர்; தேசியப் பாதுகாப்பு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்போவதாக தகவல்
இந்தியா வந்தார் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்

இந்தியா வந்தார் ஐக்கிய அரபு அமீரக அதிபர்; தேசியப் பாதுகாப்பு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்போவதாக தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 19, 2026
06:15 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஐக்கிய அரபு அமீரகத்தின்(UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். புது டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அமீரக அதிபரை மரபுப்படி வரவேற்றார். இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலான இந்த சந்திப்பு, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசியாவில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஈரான்-அமெரிக்க உறவுகளில் விரிசல், காசாவில் தொடர்ந்து வரும் உறுதியற்ற தன்மை மற்றும் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சம்பந்தப்பட்ட ஏமனில் தீர்க்கப்படாத மோதல்கள் இடையே இந்த விஜயம் நிகழ்ந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ஒப்பந்தங்கள்

தேசிய பாதுகாப்பு சம்மந்தப்பட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த வருகையின் போது, எரிசக்தி, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர். இதற்கு முன்னதாக, தேசியப் பாதுகாப்பு குறித்த உயர்மட்டக் கூட்டத்தை நடத்திய இந்திய அரசு, அண்டை நாடுகளுடனான உறவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்த முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. சவுதி அரேபியா பாகிஸ்தானுடனான ஒப்பந்தத்தின் மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சாத்தியமான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மீது அனைவரின் எதிர்பார்ப்பும் உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் இந்தியாவில் சில மணிநேரங்கள் மட்டுமே இருப்பார். இரவே அவர் நாடு திரும்புகிறார்.

Advertisement