LOADING...
1,050hp பவர் கொண்ட புதிய ஃபெராரி ஹைபிரிட் கார் இந்தியாவில் அறிமுகம்!
ஃபெராரி 849 டெஸ்டாரோஸா

1,050hp பவர் கொண்ட புதிய ஃபெராரி ஹைபிரிட் கார் இந்தியாவில் அறிமுகம்!

எழுதியவர் Prasanna
Mar 15, 2026
10:03 am

செய்தி முன்னோட்டம்

இத்தாலியின் புகழ்பெற்ற ஃபெராரி நிறுவனம், தனது புதிய ஃபிளாக்ஷிப் சூப்பர் காரான '849 டெஸ்டாரோசா' மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 1980-களில் புகழ்பெற்ற 'டெஸ்டாரோசா' பெயரினை மீண்டும் இந்த நவீன கால காருக்கு பெராரி சூட்டியுள்ளது. இந்த கார் வெறும் 2.25 வினாடிகளில் 0-100 கி.மீ வேகத்தை எட்டிப்பிடிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 330 கி.மீ ஆகும். இதில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போ V8 பெட்ரோல் என்ஜின் மற்றும் மூன்று எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவை இணைந்து ஒட்டுமொத்தமாக 1,050hp ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. இதில் உள்ள 7.45kWh பேட்டரி மூலம், பெட்ரோல் இன்றி எலக்ட்ரிக் சக்தியில் மட்டுமே சுமார் 25 கி.மீ தூரம் வரை பயணிக்க முடியும்.

ஃபெராரி

பிற அம்சங்கள்

பழைய டெஸ்டாரோசா காரினை நினைவூட்டும் வகையில் முன்பக்கத்தில் எல்-வடிவ (L-shaped) எல்இடி முகப்பு விளக்குகளும், கருப்பு நிற விசர் பட்டையும் கொடுக்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் 16-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் டிரைவருக்கு முக்கியத்துவம் அளிக்கும் காக்பிட் வசதி உள்ளது. இந்தியாவில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ. 10.37 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வசதிகள் சேர்க்கப்படும்போது இதன் ஆன்-ரோடு விலை மேலும் அதிகரிக்கும். பெராரி SF90 ஸ்ட்ராடேல் (SF90 Stradale) மாடலுக்கு மாற்றாக வந்துள்ள இந்த 849 டெஸ்டாரோசா, சந்தையில் லம்போர்கினி ரெவெல்டோ (Lamborghini Revuelto) காருக்குப் போட்டியாக அமையும். இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

Advertisement