LOADING...
இஸ்ரேலில் முதல்முறையாக அமெரிக்காவின் F-22 விமானங்கள் - ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா?
இஸ்ரேலில் அமெரிக்காவின் F-22 போர் விமானங்கள் குவிப்பு

இஸ்ரேலில் முதல்முறையாக அமெரிக்காவின் F-22 விமானங்கள் - ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 27, 2026
09:47 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா தனது அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களான 12 F-22 ராப்டர் விமானங்களை இஸ்ரேலில் உள்ள விமானப்படை தளங்களில் நிலைநிறுத்தியுள்ளது. பல தசாப்தங்களாக தனது போர் விமானங்களை இஸ்ரேலிய மண்ணில் நிரந்தரமாக நிறுத்தாமல் தவிர்த்து வந்த அமெரிக்கா, தற்போது அந்த கொள்கையை தளர்த்தியுள்ளது. ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு எதிராக அதிபர் டொனால்ட் டிரம்ப் 'அதிகபட்ச அழுத்தத்தை' கொடுத்து வரும் நிலையில், ஈரான் கடும் பதிலடி கொடுக்கப்போவதாக எச்சரித்துள்ளது. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அரபு நாடுகள், ஈரான் மீதான தாக்குதலுக்கு தங்கள் நாட்டு வான்வெளியையோ அல்லது தளங்களையோ பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறப்பம்சம்

F-22 ராப்டர் - சிறப்பம்சம்

இந்த விமானங்கள் ரேடார் கண்களில் சிக்காமல் பறக்கக்கூடியவை. எதிரி நாட்டு வான் எல்லைக்குள் ரகசியமாக நுழைந்து, அவர்களின் ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சிதைப்பதில் இவை கில்லாடிகள். ஈரான் உடனான நேரடி போர் மூளும் பட்சத்தில், ஈரானிய வான் எல்லைக்குள் முதலில் நுழையும் விமானங்கள் இவைதான் என்று ராணுவ வல்லுநர்கள் கணித்துள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டிற்கு முன்பு வரை, அரபு நாடுகளுடனான உறவைப் பாதிக்காமல் இருக்க இஸ்ரேல் உடனான ராணுவ ஒருங்கிணைப்பை அமெரிக்கா வெளிப்படையாக செய்வதை தவிர்த்து வந்தது. ஆனால், ஆபிரகாம் உடன்படிக்கைக்கு பிறகு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத்திற்கு இடையே நேரடி மற்றும் ஆழமான ஒருங்கிணைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே இந்த F-22 விமானங்களின் வருகை பார்க்கப்படுகிறது.

Advertisement