துபாயில் வசிக்கும் மக்களுக்கு ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை; பீதியில் இந்தியர்கள்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு இன்று அவசர கால ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் அங்கிருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றன. இதற்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், துபாய் மற்றும் அபுதாபி பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல் நிகழக்கூடும் என்பதால், "வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், அவசர நிலைக்குத் தயாராக இருக்கவும்" என குடியிருப்பாளர்களுக்கு நான்கு முறை தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.bed
விளக்கம்
அச்சத்தில் உள்ள இந்தியர்கள்
"செல்போனில் அடுத்தடுத்து வந்த எச்சரிக்கைகளால் நாங்கள் அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்து வைத்துள்ளோம். பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை ஒரு பையில் தயார் நிலையில் வைத்துள்ளோம்" என துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார். விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளதால், ஆயிரக்கணக்கான இந்தியப் பயணிகள் துபாய் மற்றும் பிற வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். துபாயில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அபுதாபியில் உள்ள அல் தப்ரா விமானத் தளம் ஆகியவற்றைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து ராணுவத் தாக்குதலில் அமீரகம் ஈடுபடப்போவதாக வெளியான செய்திகளை UAE அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. தற்காப்பு நடவடிக்கைகளில் மட்டுமே தாங்கள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
BREAKING: Dubai residents have just received an Emirati interior ministry alert on their phones, urging them to shelter from potential missile threats.
— Al Jazeera English (@AJEnglish) March 6, 2026
🔴 LIVE updates: https://t.co/UKxoVDc2Ex pic.twitter.com/cIBoFu9adj