LOADING...
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 2025: UAEக்கு முதலிடம் - இந்தியாவுக்கு எந்த இடம்?
தரவரிசை பட்டியலில் இந்த முறை UAE முதலிடம் பிடித்துள்ளது

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 2025: UAEக்கு முதலிடம் - இந்தியாவுக்கு எந்த இடம்?

எழுதியவர் Venkatalakshmi V
Dec 11, 2025
04:57 pm

செய்தி முன்னோட்டம்

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் தரவரிசை பட்டியலில் இந்த முறை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முதலிடம் பிடித்துள்ளது. ஆர்டன் கேபிட்டல் (Arton Capital) வெளியிட்ட 'பாஸ்போர்ட் குறியீடு' (Passport Index) 2025 தரவுகளின்படி இந்த தகவல் வெளியாகி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமக்கள் விசா இல்லாமல் அல்லது விசா ஆன் அரைவல் (Visa-on-Arrival) மூலம் அதிகபட்ச நாடுகளுக்குச் செல்ல முடியும். மொபிலிட்டி மதிப்பெண் 179 பெற்று ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 175 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தில் சிங்கப்பூரும், ஸ்பெயினும் உள்ளது. 174 மதிப்பெண்கள் பெற்று பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 18 நாடுகள் அடுத்த இடத்திலும் உள்ளது.

இந்தியா

இந்தியாவின் நிலை

இந்த குறியீட்டின்படி, இந்தியா உலக அளவில் 67-வது இடத்தில் உள்ளது. முதல் இடங்களை பிடித்துள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பாஸ்போர்ட்டின் பயண சுதந்திரம் குறைவாகவே இருப்பதாக இந்தக் குறியீடு சுட்டிக் காட்டுகிறது. பிரிட்டன், கனடா மற்றும் அமெரிக்கா போன்ற பாரம்பரியமாக வலுவான பாஸ்போர்ட்டுகளை கொண்ட நாடுகள் இந்த ஆண்டு தரவரிசையில் கணிசமான சரிவைக் கண்டுள்ளன. இவை முறையே 8 மற்றும் 9 ஆம் இடங்களை பிடித்துள்ளது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்பதை அடிப்படையாக கொண்டே இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக UAE முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement