
தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்!
செய்தி முன்னோட்டம்
நமது ஊரில் பெண்கள் தலை முடியை விரித்து போட்டு ஆடினால் மரியாதை குறைவாக கருதுவார்கள்.
துக்க வீட்டில் மட்டுமே காணக்கூடிய இந்த காட்சி, விருந்தினர்கள் முன்பு யாரும் செய்யமாட்டார்கள்.
ஆனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இது ஒரு பாரம்பரிய நடனம் என்றால் நம்புவீர்களா?
ஆம், அல்-அய்யாலா(Al-Ayyala) என குறிப்பிடப்படும் இந்த நடனம், மரியாதைக்குரியவர்களை வரவேற்க பயன்படுத்தப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி மாளிகையான காசர் அல் வதானில், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை அங்கி அணிந்த பெண்கள் வரவேற்றனர். அப்போது அவர்கள் தலைமுடியை சுழற்றும் சடங்கான அல்-அய்யாலாவைச் செய்தனர்.
அந்த வீடியோ தற்போது வைரலாகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The welcome ceremony in UAE continues! 🇺🇸🇦🇪 pic.twitter.com/sXqS1IboMN
— Margo Martin (@MargoMartin47) May 15, 2025
அல்-அய்யாலா
அல்-அய்யாலா என்றால் என்ன?
யுனெஸ்கோவின் அறிக்கையின்படி , அல்-அய்யாலா வடமேற்கு ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் பிரபலமாக உள்ளது.
இந்த பாரம்பரிய நடனத்தில், பெண் பங்கேற்பாளர்கள் நடனமாடும்போது கவிதை பாடப்படுகிறது மற்றும் டிரம்ஸ் வாசிக்கப்படுகிறது.
ஆண்கள் வாள்கள் அல்லது மூங்கில் குச்சிகளை ஏந்தி, ஒருவருக்கொருவர் எதிரே இரண்டு வரிசைகளில் நின்றுகொண்டு, ஒரு போர்க்களக் காட்சியை உருவகப்படுத்துகிறார்கள்.
அவர்கள் தங்கள் தலைகளையும் வாள்களையும் இசையின் துடிப்புகளுக்கு ஏற்ப நகர்த்துகிறார்கள்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில், பெண்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து முன்னால் நின்று நடனத்தில் பங்கேற்கிறார்கள். இசையுடன் தங்கள் தலைமுடியை பக்கவாட்டில் புரட்டுகிறார்கள்.
அல்-அய்யாலா முக்கியமாக திருமணங்களின் போது நிகழ்த்தப்படுகிறது. ஓமன் சுல்தானகம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மக்களும் பண்டிகைக் காலங்களிலும் இதைச் செய்கிறார்கள்.