
உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தது சென்னை
செய்தி முன்னோட்டம்
உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு 127வது இடம் கிடைத்துள்ளது. மேலும் இந்த அறிக்கையின் படி, சென்னை இந்தியாவில் உள்ள மிகவும் பாதுகாப்பான மெட்ரோ நகரமாகும்.
உலகின் மிக பாதுகாப்பான நகரங்கள் குறித்த சேஃப்டி இண்டெக்ஸ் குறியீட்டை, செர்பியாவை சேர்ந்த NUMBEO என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் 334 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உலகிலேயே மிக பாதுகாப்பான நகரமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி மற்றும் அஜ்மான் நகரங்கள் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன.
கத்தார் நாட்டின் தோகா நகரம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நிலையில், முதல் 10 இடங்களில் எந்த இந்திய நகரமும் இல்லை.
2nd card
உலக அளவில் 40வது இடம் பிடித்த மங்களூர்
இந்தியா சார்பில் இப்பட்டியலில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் 40வது இடத்தை பெற்றுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா 76வது இடத்தையும், அதே மாநிலத்தில் உள்ள அகமதாபாத், சூரத் முறையே 82வது, 94வது இடத்தை பிடித்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை 105வது இடத்தை பிடித்துள்ளது.
சென்னையை விட இந்த நகரங்கள் தரவரிசையில் முன்னிலையில் இருந்தாலும் இவை அனைத்தும் பெருநகரங்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அளவிட்டில் 60%, குற்ற அளவீட்டில் 40% பெற்று சென்னை உலக அளவில் 127வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.