LOADING...
ஆசிய கோப்பை 2025: இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் 12 இந்திய வம்சாவளி வீரர்கள்; முழு விபரம்
ஆசிய கோப்பை 2025 இல் இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் 12 இந்திய வம்சாவளி வீரர்கள்

ஆசிய கோப்பை 2025: இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் 12 இந்திய வம்சாவளி வீரர்கள்; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 05, 2025
02:25 pm

செய்தி முன்னோட்டம்

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை 2025 போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் மட்டுமின்றி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் அணிகளையும் எதிர்கொள்கிறது. இந்த இரண்டு அணிகளிலும், மொத்தம் 12 இந்திய வம்சாவளி வீரர்கள் உள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியில் உள்ள இந்திய வீரர்கள்

இந்திய அணி, துபாயில் செப்டம்பர் 10 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்கொண்டு, ஆசியக் கோப்பை பயணத்தைத் தொடங்க உள்ளது. ஹர்ஷித் கௌசிக், சிம்ரன்ஜித் சிங், துருவ் பராஷர், அலிஷான் ஷராபு, ஆர்யன்ஷ் ஷர்மா, ராகுல் சோப்ரா ஆகிய ஆறு இந்திய வம்சாவளி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரக அணியில் உள்ளனர். அலிஷான் ஷராபு மற்றும் ராகுல் சோப்ரா இருவரும் சமீபத்தில் அரை சதங்கள் அடித்து, நல்ல ஃபார்மில் உள்ளனர்.

ஓமன்

ஓமன் அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வம்சாவளி வீரர்கள்

இந்தியாவின் கடைசி குரூப் சுற்றுப் போட்டி, செப்டம்பர் 19 அன்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் ஓமன் அணிக்கு எதிராக நடைபெற உள்ளது. இந்த இரு அணிகளும் சர்வதேசப் போட்டியில் முதல் முறையாக மோதுகின்றன. ஓமன் அணியில் விநாயக் சுக்லா, ஆர்யன் பிஷ்ட், ஜதிந்தர் சிங், ஆஷிஷ் ஒடேதரா, கரன் சோனாவாலே, சமைய் ஸ்ரீவஸ்தவா போன்ற ஆறு இந்திய வம்சாவளி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதற்கிடையே, ஆசியக் கோப்பையில் பங்கேற்கும் இந்தியாவுடன் ஒரே குழுவில் இடம் பெறாத ஹாங்காங் அணியிலும் அன்ஷுமன் ராத், ஆயுஷ் சுக்லா, கின்சித் ஷா ஆகிய மூன்று இந்திய வம்சாவளி வீரர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.