Page Loader
2028ஆம் ஆண்டுக்கான காலநிலை மாநாட்டை இந்தியாவில் நடத்த முன்மொழிந்தார் பிரதமர் மோடி 
பிரதமர் மோடி, பசுமைக் கடன் முயற்சி என்ற முன்முயற்சியையும் அறிமுகப்படுத்தினார்.

2028ஆம் ஆண்டுக்கான காலநிலை மாநாட்டை இந்தியாவில் நடத்த முன்மொழிந்தார் பிரதமர் மோடி 

எழுதியவர் Sindhuja SM
Dec 01, 2023
05:40 pm

செய்தி முன்னோட்டம்

துபாயில் நடந்த COP28 காலநிலை உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2028ஆம் ஆண்டுக்கான COP33ஐ இந்தியாவில் நடத்த முன்மொழிந்தார். "காலநிலை மாற்றத்திற்கான ஐ.நாவின் வழிகாட்டுதலை பின்பற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது. அதனால், 2028 ஆம் ஆண்டுக்கான COP33 உச்சிமாநாட்டை இந்தியாவில் நடத்த இந்த மேடையில் இருந்து முன்மொழிகிறேன்." என்று பிரதமர் மோடி இன்று துபாயில் நடந்த மாநாட்டில் கூறினார். COP28 என குறிப்பிடப்படும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின்(UNFCCC) ஒரு பகுதியான கட்சிகளின் 28வது மாநாடு நவம்பர் 30(இன்று) முதல் டிசம்பர் 12 வரை துபாயில் நடைபெறுகிறது.

திலகவ்க்ன்

பசுமைக் கடன் முன்முயற்சியை அறிமுகபடுத்தினார் பிரதமர் மோடி 

வரவிருக்கும் நாட்களில் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இருக்கும் இந்த உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் பேசும் கௌரவத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் மோடிக்கு வழங்கியது. இந்த தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, பசுமைக் கடன் முயற்சி என்ற முன்முயற்சியையும் அறிமுகப்படுத்தினார். மரம் நடுபவர்கள், சுற்றுழலுக்கு தீங்கான பொருட்களை பொது நிலங்களில் இருந்து அகற்றுபவர்கள் போன்றவர்களுக்கு கடன் வழங்கும் முன்முயற்சியே பசுமைக் கடன்கள் முன்முயற்சி என்று அழைக்கப்டுகிறது. மேலும், 2030க்குள் கார்பன் உமிழ்வை 45 சதவீதம் குறைப்பதே இந்தியாவின் இலக்கு என்றும், புதைபடிவமற்ற எரிபொருளின் பயன்பாட்டை 50 சதவீதம் அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது என்றும் பிரதமர் மோடி இன்று கூறியுள்ளார்.