UAEஇல் செயல்பாட்டிற்கு வந்த UPI கட்டண முறை: இது எவ்வாறு செயல்படுகிறது?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) முழுவதும் QR குறியீடு அடிப்படையிலான யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) கட்டணங்களை செயல்படுத்த, NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் (NIPL), நெட்வொர்க் இன்டர்நேஷனலுடன் கூட்டு சேர்ந்துள்ளது. நெட்வொர்க் இன்டர்நேஷனலின் விரிவான வணிக தொடர்பு முழுவதும் இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு(NRIகள்) தடையற்ற மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை இந்த ஒத்துழைப்பு உதவுகிறது.
யார் பயன்படுத்தலாம்?
Network International இன் POS டெர்மினல்களில் உள்ள UPI ஏற்றுக்கொள்ளும் ஒருங்கிணைப்பு, QR-அடிப்படையிலான, எல்லை தாண்டிய பணம் செலுத்துவதற்கான பாதுகாப்பான முறையை வழங்கும். இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் இந்திய வங்கிக் கணக்குகளைக் கொண்ட NRIகள் UAE இல் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு, UPI ஐப் பயன்படுத்த இந்த புதிய முயற்சி அனுமதிக்கும்.
UAE -இல் UPI எப்படி பயன்படுத்துவது?
இந்தியாவில் பயன்படுத்தும் அதே செயல்முறை தான் UAEஇல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள UPI செயல்பாட்டிற்கும். சில்லறை கடைகள், உணவகங்கள் மற்றும் பிரபலமான இடங்களில் POS இருக்கும் வணிகர்களிடம் UPI லோகோவை கேட்டு பெறவும். அதில் கட்டப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். QR குறியீட்டை ஸ்கேன் செய்ய, உங்கள் UPI செயலியை பயன்படுத்தவும். பின்னர் உங்கள் கட்டணத் தொகையை உள்ளிடவும். பரிவர்த்தனை தொகையை உள்ளிட்டு விவரங்களைச் சரிபார்த்த பின்னர், பரிவர்த்தனையை முடிக்கவும். UPI பின் மூலம் கட்டணத்தை செலுத்தப்படாத என்பதை உறுதிப்படுத்தவும்.
விரிவாக்கம் அடையும் UPI அணுகல்
மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் டிஜிட்டல் வர்த்தகத்தின் முன்னணி நிறுவனமான Network International, 60,000க்கும் வணிகர்களும், 200,000-க்கும் அதிகமான விற்பனை முனையங்களையும் கொண்டுள்ளது. இந்த வணிகர்கள் சில்லறை விற்பனை, ஹோட்டல், போக்குவரத்து மற்றும் பல்பொருள் அங்காடிகள் உட்பட பல்வேறு துறைகளில் பரவியுள்ளனர். அவர்களிடத்தில் முன்முயற்சியாக யுபிஐ ஏற்றுக்கொள்ளும் வகையில், சில்லறை விற்பனை கடைகள், சாப்பாட்டு கடைகள் மற்றும் துபாய் மால் மற்றும் மால் ஆஃப் தி எமிரேட்ஸ் போன்ற பிரபலமான சுற்றுலா தலங்கள் போன்ற இடங்களில் உள்ள நிறுவனங்களில் இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.