Page Loader
அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா கண்டுபிடிப்பு
MERS என்பது விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையே பரவக்கூடிய ஒரு ஜூடோனிக் வைரஸ் ஆகும்.

அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா கண்டுபிடிப்பு

எழுதியவர் Sindhuja SM
Jul 25, 2023
11:53 am

செய்தி முன்னோட்டம்

அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா வைரஸ்(MERS-CoV) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. கடந்த மாதம், அபுதாபியின் அல் ஐன் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 28 வயது நபர் இந்த கொரோனா வகையால் பாதிக்கப்பட்டுளளார். இதனையடுத்து, அந்த நபரின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள 108 பேரை சுகாதார அதிகாரிகள் சோதித்துள்ளனர். ஆனால், இதுவரை இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகள் எதுவும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட நபர், ஒட்டகங்களுடனோ பிற விலங்களுடனோ நெருங்கிய தொடர்பு கொண்டதற்கான அறிகுறிகளும் இல்லை. பாதிக்கப்பட்ட நபரின் தற்போதைய நிலை குறித்த விரிவான தகவல் விரைவில் வெயிடப்படும் என்று கூறப்படுகிறது.

எக்கி

MERS-CoV வகை கொரோனா வைரஸ் என்றால் என்ன?

மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படும் MERS-CoV, முதன்முதலில் சவுதி அரேபியாவில் 2012ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இது கண்டறியப்பட்டதிலிருந்து, 27 நாடுகளில் MERS பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் இதுவரை 2,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 936 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. MERS என்பது விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையே பரவக்கூடிய ஒரு ஜூடோனிக் வைரஸ் ஆகும். பாதிக்கப்பட்ட ட்ரோமெடரி ஒட்டகங்களை முன்னெச்சரிக்கை இல்லாமல் தொடர்பு கொண்டதால் சவூதி அரேபிய மக்களுக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் மற்றும் நிமோனியா இந்த நோய் தொற்றின் அறிகுறிகளாகும்.