டெஸ்ட் கிரிக்கெட்: செய்தி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலின் தற்போதைய நிலை : இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா?

இந்தூரில் படுதோல்வியடைந்த இந்திய அணி அகமதாபாத்தில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வாய்ப்பு உறுதியாகிவிடும்.

மீண்டும் ஆஸ்திரேலியாவின் முழுநேர கேப்டனாகிறாரா ஸ்டீவ் ஸ்மித்? அவரே கொடுத்த விளக்கம்!

இந்தூரில் இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் 3வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஸ்டீவ் ஸ்மித் அணிக்கு மீண்டும் அசத்தலான வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

10 ஆண்டுகளில் இந்தியாவில் இரண்டு டெஸ்ட் வெற்றிகள் பெற்ற முதல் வெளிநாட்டு கேப்டன் : ஸ்டீவ் ஸ்மித் சாதனை

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வீழ்த்திய முதல் கேப்டன் என்ற பெருமையை ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார்.

INDvsAUS மூன்றாவது டெஸ்ட் : ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

மூன்றாவது டெஸ்டில் இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றது. ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், தொடர் தற்போது 2-1 என்ற கணக்கில் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது.

IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : 76 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 76 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

INDvsAUS மூன்றாவது டெஸ்ட் : அஸ்வின்-ஜடேஜா ஜோடி இந்திய அணியை மீட்குமா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்க உள்ளது.

IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 47 ரன்கள் முன்னிலை

இந்தூரில் புதன்கிழமை (மார்ச் 1) தொடங்கிய 3வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் முதலிடத்திற்கு முன்னேற்றம்

ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளராக இருந்த ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.

IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

உள்நாட்டில் 200வது சர்வதேச போட்டி : புதிய சாதனை படைத்தார் விராட் கோலி

இந்தூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணியின் விராட் கோலி, உள்நாட்டில் தனது 200வது சர்வதேச போட்டியில் விளையாடி புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.

IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது இந்தியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

அன்று இந்தியா, இன்று நியூசிலாந்து : பாலோ-ஆன் ஆகியும் வெற்றி பெற்ற போட்டிகள்

நியூசிலாந்து இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்தை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து த்ரில் வெற்றி பெற்றதோடு தொடரை 1-1 என சமன் செய்தது.

ஒரு ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசியில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் : கேன் வில்லியம்சன் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை நட்சத்திர பேட்டர் கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார்.

இரண்டாவது இன்னிங்சில் அதிக விக்கெட்டுகள் : முரளிதரன் சாதனையை முறியடித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

நியூசிலாந்தில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் விளையாடி வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் : தோனியின் சாதனையை சமன் செய்த டிம் சவுதி!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது நிலையை வெளிப்படுத்தியுள்ளது.

100% உடல் தகுதியுடன் மூன்றாவது டெஸ்டில் களமிறங்கும் கேமரூன் கிரீன்

இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் 100% உடற்தகுதியுடன் இருப்பதாக அறிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா உடல் எடையில் கவனம் செலுத்த வேண்டும் : கபில்தேவ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி அபார வெற்றிகளை குவித்து வந்தாலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ரோஹித் சர்மாவின் உடற்தகுதி குறித்து விமர்சித்துள்ளார்.

டெஸ்டில் அதிவேகமாக 800 ரன்களை கடந்த வீரர் : இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஹாரி புரூக் சதம் அடித்ததோடு, முதல் 9 இன்னிங்ஸ்களில் 800 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பேட் கம்மின்ஸ் விலகல்!

இந்தூரில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது பார்டர்-கவாஸ்கர் டெஸ்டில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : இந்தியாவுக்கு ராசியான இந்தூர் மைதானத்தில் வெல்லுமா?

மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் 4 டெஸ்ட் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது.

பேட் கம்மின்ஸின் நான்கு ஆண்டு ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : டெஸ்ட் தரவரிசையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்திற்கு முன்னேற்றம்

இங்கிலாந்து அணியின் 40 வயதான மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

கே.எல்.ராகுலை இந்திய அணியில் இருந்து நீக்கி விடலாமா? ChatGPT'யின் சுவாரஸ்ய பதில்!

இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், அவரை அணியிலிருந்து நீக்கி விடலாமா என்பது குறித்த கேள்விக்கு சாட் ஜிபிடி பதிலளித்துள்ளது.

இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து மேலும் ஒரு ஆஸ்திரேலிய வீரர் நீக்கம்!!

உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக, ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர், இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கேப்டனாக முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி : தோனியின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கடந்த வாரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக தனது நான்காவது வெற்றியை நிறைவு செய்தார்.

காயத்தால் அவதி : இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து டேவிட் வார்னர் விலகல்!

முழங்கை எலும்பு முறிவு காரணமாக பார்டர்-கவாஸ்கர் டிராபியின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து டேவிட் வார்னர் விலகியுள்ளார்.

மாஸ் காட்டும் மெக்கல்லம்-ஸ்டோக்ஸ் ஜோடி : வலுவான டெஸ்ட் அணியாக உருவெடுத்துள்ள இங்கிலாந்து!

பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் முறையே தலைமை பயிற்சியாளர் மற்றும் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து ஒரு வலிமையான கிரிக்கெட் அணியாக உருவெடுத்துள்ளது.

பார்டர் கவாஸ்கர் தொடர் : ஜோஷ் ஹேசில்வுட் விலகல்! ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரும் பின்னடைவு!

இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுலின் துணை கேப்டன் பதவியை பறித்தது பிசிசிஐ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்த நிலையில், கே.எல்.ராகுலுக்கு பின்னல் துணை கேப்டன் என்ற பொறுப்பை வழங்கவில்லை.

குடும்பத்தில் சிக்கல் : அவசரமாக ஆஸ்திரேலியா கிளம்பினார் கேப்டன் பேட் கம்மின்ஸ்!

ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ், குடும்பத்தில் எழுந்துள்ள சிக்கல் காரணமாக ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மோசமான ஆட்டம்! கே.எல்.ராகுலை இந்திய அணியிலிருந்து கழட்டி விட திட்டம்!

டெல்லியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

IND vs AUS 2வது டெஸ்ட் : முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!

டெல்லியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா 263 ரன்களுக்கு சுருட்டியது.

இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் : 14வது சதத்தை மிஸ் பண்ணிய உஸ்மான் கவாஜா!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா அரை சதம் விளாசினார்.

700 முதல்தர விக்கெட்டுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 விக்கெட்டுகள் : அஸ்வின் சாதனை!

டெல்லியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் 700 முதல் தர விக்கெட்டுகளை கடந்து சாதனை படைத்தார்.

IND vs AUS 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் : வெற்றி வாய்ப்பு யாருக்கு?

4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 17) டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை எடுத்த ஐந்தாவது நியூசி. வீரர் : நீல் வாக்னர் சாதனை!

நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர், இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டின் முதல் நாளில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளார்.

IND vs AUS Test : ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு காரணம் பிக்பாஷ் லீக் தான் : முன்னாள் பயிற்சியாளர் குற்றச்சாட்டு!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா பெற்ற மிக மோசமான தோல்விக்கு உள்ளூர் லீக் போட்டியான பிக்பாஷ் லீக்கிற்கு கொடுத்த அதிக முக்கியத்துவம் தான் காரணம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 13வது இந்தியர் : சாதனை படைக்கும் புஜாரா!

இந்திய அணியின் மூத்த வீரர் சேதேஷ்வர் புஜாரா தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்!!

புதன்கிழமை (பிப்ரவரி 15) வெளியிடப்பட்ட சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சாளர்களில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.