
டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை எடுத்த ஐந்தாவது நியூசி. வீரர் : நீல் வாக்னர் சாதனை!
செய்தி முன்னோட்டம்
நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர், இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டின் முதல் நாளில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளார்.
வாக்னர் 16.2 ஓவர்களில் 82 ரன்களை விட்டுக்கொடுத்து இங்கிலாந்தின் ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஃபோக்ஸ் மற்றும் ஜாக் லீச் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேலும் இதன் மூலம், வாக்னர் டெஸ்டில் 250 விக்கெட்டுகளை கடந்த ஐந்தாவது நியூசிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
நியூசிலாந்து அணியில் இதற்கு முன்பாக, சர் ரிச்சர்ட் ஹாட்லீ (431), டேனியல் வெட்டோரி (361), டிம் சவுத்தி (355) மற்றும் ட்ரென்ட் போல்ட் (317) ஆகியோர் மட்டுமே டெஸ்டில் 250க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ட்வீட்
#StatChat | With his dismissal of Ben Foakes, @NeilWagner13 becomes the fifth New Zealander to take 250 Test wickets. The left-armer brings up the milestone in just his 60th Test 🏏 #NZvENG pic.twitter.com/folZEHhvGI
— BLACKCAPS (@BLACKCAPS) February 16, 2023