Page Loader
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பேட் கம்மின்ஸ் விலகல்!
மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பேட் கம்மின்ஸ் விலகல்

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பேட் கம்மின்ஸ் விலகல்!

எழுதியவர் Sekar Chinnappan
Feb 24, 2023
01:05 pm

செய்தி முன்னோட்டம்

இந்தூரில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது பார்டர்-கவாஸ்கர் டெஸ்டில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் தோல்விக்குப் பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக கம்மின்ஸ் அவசரமாக ஆஸ்திரேலியா கிளம்பினார். அவரது தாயார் உடல்நிலை மிக மோசமடைந்துள்ளதால் தான் அவர் ஆஸ்திரேலியா திரும்பியது பின்னர் தெரிய வந்தது. இந்நிலையில், அவரது தாயார் சிகிச்சையில் உளளதால் தொடர்ந்து தாயுடன் இருக்க விரும்புகிறார். இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இந்தூரில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் அணியை வழிநடத்த உள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

பேட் கம்மின்ஸ் விலகல்