IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது இந்தியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இன்று தொடங்கும் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்வதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் உறுதி செய்யும் முனைப்புடன் இந்தியா உள்ளது. முன்னதாக இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் போட்டியை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அங்கு மைதானம் சரியில்லாததால் இந்தூருக்கு மாற்றப்பட்டது.
இந்தியா vs ஆஸ்திரேலியா : விளையாடும் லெவன்
ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் இல்லாததால் ஸ்டீவ் ஸ்மித் இன்றைய போட்டியில் கேப்டனாக செயல்படுகிறார். இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக ஷுப்மன் கில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி : ரோகித் சர்மா(கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, கே.எஸ்.பாரத்(விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆஸ்திரேலிய அணி : உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், டோட் மர்பி, மேத்யூ குஹ்னெமன்