
குடும்பத்தில் சிக்கல் : அவசரமாக ஆஸ்திரேலியா கிளம்பினார் கேப்டன் பேட் கம்மின்ஸ்!
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ், குடும்பத்தில் எழுந்துள்ள சிக்கல் காரணமாக ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ கூற்றின்படி, அவர் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக மீண்டும் இந்தியா திரும்பி விடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர் குறித்த காலத்திற்குள் இந்தியா திரும்ப முடியாவிட்டால், ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்துள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை உறுதி செய்ய அடுத்த இரண்டு போட்டிகளில் ஒன்றை டிரா செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஈஎஸ்பிஎன் ட்வீட்
Pat Cummins has flown home to Sydney from the tour of India for a few days due to a serious family health issue
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 20, 2023
More ▶️ https://t.co/fvUKO7CTlZ #INDvAUS pic.twitter.com/3uSULP3y0x