Page Loader
இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் : 14வது சதத்தை மிஸ் பண்ணிய உஸ்மான் கவாஜா!
14வது சதத்தை மிஸ் பண்ணிய உஸ்மான் கவாஜா

இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் : 14வது சதத்தை மிஸ் பண்ணிய உஸ்மான் கவாஜா!

எழுதியவர் Sekar Chinnappan
Feb 17, 2023
04:41 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா அரை சதம் விளாசினார். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளித்து 125 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். இந்த எண்ணிக்கையில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். எனினும் கவாஜா இறுதியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் அவர் தனது 14வது சதத்தை அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஆகஸ்ட் 2019க்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இருந்து வந்த கவாஜா, கடந்த 2022 ஜனவரியில் மீண்டும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு திரும்பி பிறகு தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

உஸ்மான் கவாஜா

உஸ்மான் கவாஜாவின் தனித்துவமான டெஸ்ட் செயல்திறன்

2019க்கு பிறகு நீண்ட காலம் டெஸ்ட் ஆடாமல் இருந்த கவாஜா 2022 தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான அவரது மறுபிரவேச ஆட்டத்தில் இரட்டை சதங்களை அடித்தார். அவர் இந்த ஒரு வருடத்தில் 14 டெஸ்டில் 1,362 ரன்களை எடுத்துள்ளார். இதில் 5 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் அடங்கும். இந்த காலகட்டத்தில் வேறு எந்த பேட்டரும் அதிக டெஸ்ட் ரன்களை எடுத்ததில்லை. கவாஜா இந்தியாவுக்கு எதிரான ஆறாவது டெஸ்டில் தற்போது விளையாடி வருகிறார். இந்தியாவுக்கு எதிராக இதுவரை 28.50 சராசரியை 285 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும். ஆசியாவில், கவாஜா 14 டெஸ்டில் 1,066 ரன்களை குவித்துள்ளார். இதில் 3 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும்.