
பார்டர் கவாஸ்கர் தொடர் : ஜோஷ் ஹேசில்வுட் விலகல்! ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரும் பின்னடைவு!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கேப்டன் கம்மின்ஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஸ்திரேலிய அணியின் முகாமில் இருந்து அவசரமாக நாடு திரும்பியுள்ளார். அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நாடு திரும்புவார் என கூறப்பட்டாலும், அது உறுதியாக தெரியவில்லை.
இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மீதமுள்ள டெஸ்ட் தொடரில் இருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் நீக்கப்பட்டதாக ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, ஹேசில்வுட் நாக்பூர் மற்றும் டெல்லியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தனது இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஜோஷ் ஹேசில்வுட் விலகல்
Border-Gavaskar Trophy: Big blow for Australia as Josh Hazlewood ruled out of series
— ANI Digital (@ani_digital) February 20, 2023
Read @ANI Story | https://t.co/m26GNo4oCQ#INDvAUS #BorderGavaskarTrophy #joshhazlewood #Cricket pic.twitter.com/DXhZZn3ck8