
பேட் கம்மின்ஸின் நான்கு ஆண்டு ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : டெஸ்ட் தரவரிசையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்திற்கு முன்னேற்றம்
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்து அணியின் 40 வயதான மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மேலும் மூன்றாவது இடத்தில் இருந்த இந்திய வீரர் அஸ்வின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக 267 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணிக்காக ஆண்டர்சன் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் முதலிடத்திற்கு உயர்ந்தார்.
இதன் மூலம் டெஸ்ட் தரவரிசையின் முதலிடத்தில் நான்கு ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய கம்மின்ஸ் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதற்கிடையே ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் ஏழு இடங்கள் முன்னேறி ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேலும் அக்சர் படேல் ஆல்ரவுண்டர் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
ஐசிசி ட்வீட்
🚨 We have a new World No.1 🚨
— ICC (@ICC) February 22, 2023
Pat Cummins is displaced atop the @MRFWorldwide ICC Men's Test Bowlers' Rankings 😮
Details 👇