
உள்நாட்டில் 200வது சர்வதேச போட்டி : புதிய சாதனை படைத்தார் விராட் கோலி
செய்தி முன்னோட்டம்
இந்தூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணியின் விராட் கோலி, உள்நாட்டில் தனது 200வது சர்வதேச போட்டியில் விளையாடி புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.
கோலி 2008ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானத்தில் இருந்து இந்திய அணியின் தூணாக இருந்து வருகிறார்.
இதுவரை சொந்த மண்ணில் 199 போட்டிகளில், 221 இன்னிங்ஸ்களில் 10,829 ரன்கள் எடுத்துள்ளார்.
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக மோசமான ஃபார்மில் உள்ள கோலி டி20 மற்றும் ஒருநாள் போட்டியை போல டெஸ்டிலும் மீண்டு வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்.எஸ்.தோனி மட்டுமே உள்நாட்டில் 200 சர்வதேச போட்டிகளுக்கும் மேல் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
உள்நாட்டில் கோலியின் 200வது போட்டி
#ViratKohli has been a pillar of India's home domination ever since he hit the international cricket scene in 2008 #INDvAUS #INDvsAUS https://t.co/sItecsShiP
— CricketNDTV (@CricketNDTV) March 1, 2023