INDvsAUS மூன்றாவது டெஸ்ட் : ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
மூன்றாவது டெஸ்டில் இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றது. ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், தொடர் தற்போது 2-1 என்ற கணக்கில் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் படுதோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா, மூன்றாவது போட்டியில் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் டேவிட் வார்னர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா இதில் தோல்வியடைந்துள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தகுதியை உறுதி செய்ய அடுத்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட் புள்ளி விபரங்கள்
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு சுருண்டது. மேத்யூ குஹ்னெமன் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவும் 197 ரன்களில் சுருண்டது. ஜடேஜா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா நாதன் லியானின் (8 விக்கெட்டுகள்) சுழலில் சிக்கி 163 ரன்களில் முடித்துக் கொண்டது. இதனால் வெறும் 76 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா எளிதாக வெற்றி பெற்றது.