
இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து மேலும் ஒரு ஆஸ்திரேலிய வீரர் நீக்கம்!!
செய்தி முன்னோட்டம்
உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக, ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர், இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேற்கு ஆஸ்திரேலியாவுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக அவர் மார்ச் 1 ஆம் தேதி இந்தூரில் தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்படவில்லை.
முன்னதாக, நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் லெவனில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக டோட் மர்பி நாதன் லியோனுடன் களமிறக்கப்பட்டார்.
பின்னர் டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டில், ஆஸ்திரேலியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்தது. ஆனால் அதிலும் அகருக்கு பதிலாக மேத்யூ குஹ்னேமான் களமிறக்கப்பட்டார்.
இதனால் தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், உள்நாட்டு தொடரில் பங்கேற்க திரும்ப அனுப்பப்பட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
ஆஷ்டன் அகர் நீக்கம்
JUST IN: Ashton Agar, who was not picked by Australia for the first two #INDvAUS Tests, will head home to play domestic cricket for Western Australia
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 22, 2023
▶️ https://t.co/HNsPYGKitH pic.twitter.com/cplz29HR24