Page Loader
காயத்தால் அவதி : இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து டேவிட் வார்னர் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து டேவிட் வார்னர் விலகல்

காயத்தால் அவதி : இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து டேவிட் வார்னர் விலகல்!

எழுதியவர் Sekar Chinnappan
Feb 21, 2023
12:48 pm

செய்தி முன்னோட்டம்

முழங்கை எலும்பு முறிவு காரணமாக பார்டர்-கவாஸ்கர் டிராபியின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து டேவிட் வார்னர் விலகியுள்ளார். டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸின் போது முகமது சிராஜ் அடித்ததில் வார்னரின் இடது முழங்கையில் காயம் ஏற்பட்டது. மேலும் அடுத்த சில ஓவர்களில் அவரது ஹெல்மெட்டில் பந்து அடித்ததால், தலையிலும் லேசான காயம் பட்டதால் டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறினார். தலையில் காயம் குறைந்துவிட்டாலும், அவரது முழங்கை வலி ஒரு பிரச்சினையாகவே உள்ளது. இந்நிலையில், தற்போது சிகிச்சைக்காக அவர் சிட்னி கிளம்புகிறார். இதனால் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளில் பங்கேற்காமல், மார்ச் 17ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் தொடருக்கு மீண்டும் இந்தியா வருவார் என கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

டேவிட் வார்னர் விலகல்