
அன்று இந்தியா, இன்று நியூசிலாந்து : பாலோ-ஆன் ஆகியும் வெற்றி பெற்ற போட்டிகள்
செய்தி முன்னோட்டம்
நியூசிலாந்து இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்தை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து த்ரில் வெற்றி பெற்றதோடு தொடரை 1-1 என சமன் செய்தது.
ஒரு ரன் வித்தியாசத்தில் டெஸ்டில் ஒரு அணி வெற்றி பெற்ற இரண்டாவது நிகழ்வு இதுவாகும்.
இதற்கு முன்பாக 1993இல் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் மேற்கிந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலியாவை ஒரு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒட்டுமொத்தமாக, 10 அல்லது அதற்கும் குறைவான ரன்களில் நியூசிலாந்து பெற்ற மூன்றாவது டெஸ்ட் வெற்றி இதுவாகும்.
இதற்கிடையே, முதல் இன்னிங்சில் பாலோ-ஆன் ஆன பிறகும் வெற்றி பெற்ற நான்காவது நிகழ்வு இதுவாகும்.
பாலோ-ஆன்
பாலோ-ஆன் ஆகியும் வெற்றி பெற்ற போட்டிகள்
1894ஆம் ஆண்டு சிட்னியில் இங்கிலாந்து 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதே இதுபோன்ற முதல் நிகழ்வாகும்.
அதன் பிறகு கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் கழித்து 1981ஆம் ஆண்டு லீட்ஸில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 18 ரன்களில் வெற்றி பெற்று இதே போன்ற ஒரு வெற்றியை பதிவு செய்தது.
பின்னர் 2001இல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே கொல்கத்தாவில் முதல் இன்னிங்சில் 174 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது.
இந்தியாவின் தோல்வி உறுதியாகத் தெரிந்தாலும், விவிஎஸ் லக்ஷ்மண் (281), டிராவிட்டின் (180) அபார ஆட்டத்தால் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 657 ரன்கள் எடுத்ததோடு, 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
இதையடுத்து தற்போது நான்காவது முறையாக நியூசிலாந்து இந்த சாதனையை செய்துள்ளது.