கே.எல்.ராகுலின் துணை கேப்டன் பதவியை பறித்தது பிசிசிஐ
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்த நிலையில், கே.எல்.ராகுலுக்கு பின்னல் துணை கேப்டன் என்ற பொறுப்பை வழங்கவில்லை. தற்போது மிக மோசமான ஃபார்மில் இருக்கும் கே.எல்.ராகுலுக்கு துணை கேப்டன் டேக் கொடுக்கப்படாததால், அவரிடமிருந்து துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டதாகத்தான் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. கடந்த ஏழு இன்னிங்ஸ்களில் 22, 23, 10, 2, 20, 17, மற்றும் 1 ரன்கள் எடுத்த ராகுல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பெற்ற அபார வெற்றிக்கு மத்தியிலும் கே.எல்.ராகுலின் செயல்திறன் கேள்விக்குறியாகி உள்ளது. ஷுப்மான் கில் போன்ற பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், கே.எல்.ராகுலை அணியிலிருந்து நீக்குவதற்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.
அணியில் இருந்து நீக்கப்படுவாரா கே.எல்.ராகுல்?
தற்போதைக்கு ராகுலை அணியில் இருந்து நீக்க முடிவு செய்யவில்லை என்றாலும், அவரை துணை கேப்டன் பதவியில் இருந்து தரமிறக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஒரு அறிக்கையின்படி, பிசிசிஐ கேப்டனான ரோஹித் சர்மாவுக்கு தனது துணை கேப்டனை தானே நியமிக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே எல் ராகுல், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.