IND vs AUS 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. முன்னதாக, நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நாடாகும் இரண்டாவது போட்டியில் இன்று (பிப்ரவரி 17) ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. இந்திய அணியில் காயம் காரணமாக முதல் போட்டியில் இடம் பெறாத ஸ்ரேயாஸ் ஐயர், இரண்டாவது போட்டியில் இணைந்துள்ளார். முதல் போட்டியில் இடம் பெற்றிருந்த சூர்யகுமார் யாதவுக்கு இந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்படவில்லை.
விளையாடும் லெவன் வீரர்களின் விபரம்
முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் டோட் முர்பி சர்வதேச டெஸ்டில் அறிமுகமான நிலையில், இந்த போட்டியில் மற்றொரு ஸ்பின்னர் மேத்யூ குஹ்னெமன் தனது முதல் டெஸ்டில் விளையாட உள்ளார். இந்தியா (பிளேயிங் 11) : ரோஹித் சர்மா(கேப்டன்), கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆஸ்திரேலியா (பிளேயிங் 11) : டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ்(கேப்டன்), டோட் மர்பி, நாதன் லியான், & மேத்யூ குஹ்னெமன்.