நரேந்திர மோடி: செய்தி
ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட் உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டது
அமெரிக்க கடன் நெருக்கடி பேச்சு வார்த்தை காரணமாக ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை நேற்று(மே-16) ரத்து செய்தார்.
10 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 10 நாள் பயணமாக மே 31ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் என்றும், ஜூன் 4 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் சுமார் 5,000 வெளிநாடு வாழ் இந்தியர்கள்(NRI) நடத்தும் பேரணியில் உரையாற்ற உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
970 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.
$10 பில்லியன் அளவு ஏற்றுமதி இலக்கு.. பிரதமருடன் வால்மார்ட் சிஇஓ சந்திப்பு!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருக்கிறார் வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டக் மெக்மில்லன்.
தேசிய தொழில்நுட்ப தினம்: ரூ.5,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று(மே 11) லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் கிராவிடேஷனல் வேவ் அப்சர்வேட்டரிக்கு(LIGO-India) அடிக்கல் நாட்டினார். மேலும், தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு ரூ.5800 கோடி மதிப்பிலான அறிவியல் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஜூன் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் விருந்து ஏற்பாடு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22 ஆம் தேதி அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கு முன் கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம்
கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்தார் மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, "வன்முறை சம்பவங்களை தவிர்ப்பதற்காக" சர்ச்சைக்குரிய 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தைத் தடை செய்துள்ளது.
சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக
காங்கிரஸ் மற்றும் அதன் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடிதம் எழுதியுள்ளது.
கேரள படகு விபத்து: 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நேற்று(மே 7) மாலை கடற்கரை அருகே இரட்டை அடுக்கு படகு கவிழ்ந்து மூழ்கியதில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 22 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
சிட்னியில் உள்ள இந்து கோவிலை சிதைத்த இந்திய எதிர்பாளர்கள்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஒரு முக்கிய இந்து கோவிலின் சுவர்கள் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டிகளால் இன்று(மே 5) சிதைக்கப்பட்டது.
'தி கேரளா ஸ்டோரி': காங்கிரஸ் தீவிரவாதத்துக்கு துணைபோவதாக பிரதமர் குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சி வாக்குகளை பெறுவதற்காக பயங்கரவாதத்தின் முன் மண்டியிடுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(மே 5) குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது அரசின் செயல்திட்டத்தில் உள்ளது: மத்திய அமைச்சர்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு-காஷ்மீரை மீட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றுவது அரசின் செயல்திட்டத்தில் உள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று(மே 1) தெரிவித்தார்.
'மனதின் குரல்': பில் கேட்ஸ்க்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி, தனது 'மனதின் குரல்' ரேடியோ நிகழ்ச்சியின் 100வது எபிசோட்டில் நேற்று கலந்துகொண்டார்.
'பிரதமர் மோடி விஷப் பாம்பை போன்றவர்': மல்லிகார்ஜுன் கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடியை விஷ பாம்புடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.
காலமான முன்னாள் பஞ்சாப் முதல்வரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி
நேற்று காலமான மூத்த அரசியல்வாதியும், அகாலிதளத்தின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்-26) சண்டிகர் சென்றடைந்தார்.
கேரளா வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் எம்.பி புகைப்படம் - கடும் கண்டனம்!
கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கேரளாவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை திருவனந்தபுரத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 25) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் முதல் தண்ணீர் மெட்ரோ திட்டம்.. 'கொச்சி வாட்டர் மெட்ரோ'
கேரளாவின் கனவுத் திட்டம் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்ட 'கொச்சி வாட்டர் மெட்ரோ' திட்டத்தை இன்று கொடியசைத்து துவக்கி வைக்கவிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்தியாவின் முதல் நீர் வழி மெட்ரோ: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
நகரங்களில் வாழ்வதை எளிதாக்கும் வகையில், இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோவை பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஏப் 25) கேரளாவின் கொச்சியில் தொடங்கி வைக்கிறார்.
ராகுல் காந்தியின் தண்டனைக்கு இடைக்கால தடை: பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு
'மோடி குடும்பப்பெயர்' அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு மே 15 வரை தடை விதித்து பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 நாள் பயணமாக கேரளா வர இருக்கும் பிரதமர் மோடி
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 24) கொச்சிக்கு வரவுள்ளதால், கேரள காவல்துறை அடுத்த இரண்டு நாட்களுக்கு கொச்சியில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள் பிரச்சனை: பிரதமர் மோடி ஆலோசனை
சூடானில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 21) இந்திய உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அசாமில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 14) அசாம் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார்.
மீண்டும் பிபிசி நிறுவனத்தில் சோதனை: அமலாக்க இயக்குநரகம் நடவடிக்கை
அந்நியச் செலாவணி மீறல்கள் தொடர்பான புதிய விசாரணைக்காக, நிதி விவரங்களை சமர்ப்பிக்குமாறு இந்தியாவில் உள்ள பிபிசியிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
வளர்ந்த இந்தியாவிற்காக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடி
நவீன மற்றும் வளர்ந்த இந்தியாவின் தேவைகளை மனதில் கொண்டு புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 12) தெரிவித்தார்.
ஊழியர்கள் சிறை செல்வார்கள்... இந்திய சட்டங்கள் குறித்து எலான் மஸ்க் பதில்!
ட்விட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் ஸ்பேஸ் மூலம் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
உக்ரைனுக்கு உதவி தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உக்ரைன் அதிபர்
கூடுதல் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று உக்ரைன் இந்தியாவிடம் கோரியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் இன்று(ஏப் 12) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் டெஸ்லா உற்பத்தியை தொடங்க திட்டமா? மோடியை பின் தொடர்ந்த எலான் மஸ்க்!
பிரபல தொழிலதிபரான டெஸ்லா நிறுவன தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளார்.
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்வு: 2018ஐ விட 200 புலிகள் அதிகரிப்பு
இந்திய காடுகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்ந்துள்ளது. 2018ஆம் ஆண்டு இருந்ததை விட 200 புலிகள் அதிகரித்துள்ளன என்று அரசாங்கம் கணக்கிட்டுள்ளது.
தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம்
தெலுங்கானாவின் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி(BRS) கட்சி மற்றும் அதன் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் ஆகியோர், மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பதாகவும், 'பரிவர்வாத்'(குடும்ப ஆட்சி) மற்றும் ஊழலில் ஈடுபடுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்-8) கடுமையாக சாடினார்.
நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் அறிமுகம்
பிரதமர் நரேந்திர மோடி, சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினல் உட்பட பல உள்கட்டமைப்பு திட்டங்களை நாளை(ஏப்-8) சென்னையில் திறந்து வைக்க இருக்கிறார்.
நாட்டில் ஏழைகள் ஏழையாகி கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல்
பிரதமர் நரேந்திர மோடியின் சமூக நீதிக்கான பாஜகவின் அர்ப்பணிப்பு குறித்த கருத்தை சாடிய ராஜ்யசபா எம்.பி கபில் சிபல், பாஜக அரசாங்கத்தின் கீழ் "பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகி கொண்டிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினலைப் பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்து வைக்கிறார்
தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்ட சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் சனிக்கிழமை(ஏப் 8) அன்று திறந்து வைக்க இருக்கிறார்.
பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம்
பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை வெளியிட குஜராத் பல்கலைக்கழகத்திற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை குஜராத் மாநில உயர்நீதிமன்றம் இன்று(மார் 31) ரத்து செய்தது.
பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது: செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி
குஜராத் நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார்,
ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம்
2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.
இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: உயர் அதிகாரிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை
இந்தியாவில் கொரோனா வெகுவாக அதிகரித்து வருவதை முன்னிட்டு, உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று(மார் 22) ஆலோசனை நடத்தவுள்ளார்.
டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு
டெல்லியின் பல பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை அடுத்து, டெல்லி காவல்துறை 100 FIRகளை பதிவு செய்து, ஆறு பேரை கைது செய்துள்ளது.
இந்திய-ஜப்பான் உச்சிமாநாடு: டெல்லிக்கு வந்திருக்கும் ஜப்பான் பிரதமர்
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று(மார் 20) புது டெல்லி வந்தடைந்தார். மேலும், அவர் இன்று(மார் 20) பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.