டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு
டெல்லியின் பல பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை அடுத்து, டெல்லி காவல்துறை 100 FIRகளை பதிவு செய்து, ஆறு பேரை கைது செய்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 2,000 ஆன்டி-மோடி போஸ்டர்களை போலீசார் அகற்றியதாக கூறப்படுகிறது. அந்த போஸ்டர்களில், "மோடியை அகற்றவும், தேசத்தை காப்பாற்றவும்" என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததது. ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் 2,000 போஸ்டர்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. மத்திய டெல்லியில் உள்ள ஐபி எஸ்டேட் பகுதியில் ஒரு வேனை மறித்து சோதனையிட்ட போது இந்த சுவரொட்டிகளை போலீசார் கண்டுபிடித்தனர். இ ந்த சுவரொட்டிகளை ஆம் ஆத்மி தலைமையகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக வேன் ஓட்டுநர் போலீசாரிடம் தெரிவித்தார்.
போஸ்டர் விவாகரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு தொடர்பு இருக்கிறதா?
"நகரம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததை அடுத்து, டெல்லி காவல்துறை 100 FIRகளை பதிவு செய்து 6 பேரை கைது செய்துள்ளது. சுவரொட்டிகளில் அச்சகத்தின் விவரங்கள் எதுவும் இல்லை. பிரிண்டிங் பிரஸ் சட்டம் மற்றும் சொத்துக்களை கெடுக்கும் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளன." என்று சிறப்பு சிபி தீபேந்திர பதக், ANI செய்தி நிறுவனத்திடம் கூறி இருக்கிறார். "ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டவுடன் வேன் ஒன்று மறிக்கப்பட்டது. சில சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்," என்று அவர் மேலும் கூறியுள்ளார். இது குறித்து, ஆம் ஆத்மி கட்சி எந்த விளக்கமும் அளிக்கவில்லை.